Header Ads



இறைச்சிக்காக பசுக்கள் அறுப்பதை நிறுத்த, பிரதமர் எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது


(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)


இறைச்சிக்காக பசுக்கள் அறுப்பதை நிறுத்த பிரதமர் எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது. அத்துடன் அரசாங்கம் வரி அறவிடும்போது வசதி உள்ளவர்களிடம் அறவிடவேண்டுமே தவிர ஏழை மக்களிடம் அதனை திணிக்கக்கூடாது என எதிர்க்கட்சி உறுப்பினர் வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்


பாராளுமன்றத்தில் நேற்று உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மீது இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


வரி இல்லாமல் எந்த அரசாங்கத்தையும் கொண்டுசெல்ல முடியாது. என்றாலும் வரி அறவிடும்போது வசதி உள்ளவர்களிடமிருந்தே அறவிடப்படவேண்டுமே தவிர ஏழை மக்களிடம் அதனை திணிக்கக்கூடாது. வரி சுமை ஏழை மக்களிடமிருந்தும் அறவிடுவதால் அந்த மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் வரி அறவீட்டில் வசதி குறைந்த மக்கள் பாதிக்கப்படாதவகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் நான் பிரதி நிதித்துவப்படுத்தும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளாசத்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் அந்த துறையில் தொழில் செய்யும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொராேனா தொற்று பரவலே இதற்கு காரணமாகும். அதேபோன்று எமது மக்களில் அதிகமானவர்கள் விவசாய துறையில் ஈடுபடுபவர்கள். அவர்களுக்கு தேவையான உரம் கிடைப்பதில்லை. அதனால் விவசாயத்தை முறையாக மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.


அத்துடன் தாேட்டத்தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கப்படவேண்டும். தற்போது இருக்கும் வாழ்க்கைச்செலவுக்கு ஏற்ற வருமானம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால் விவசாயம், உள்ளாசத்துறை மற்றும் தோட்டத்தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பாரியளவில் பாதிக்கப்படுவார்கள்.


இதேவேளை, பசுக்களை இறைச்சிக்காக அறுப்பதை தடைசெய்ய பிரதமர் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஆளுங்கட்சி கூட்டத்தில் தெரிவித்திருப்பதாக அறியவருகின்றது. பிரதமரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. பசுக்கள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதால் பால் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. அத்துடன் பசுக்களை உணவுக்காக எடுத்துக்கொள்பவர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கும் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

2 comments:

  1. Government is trying to save the foreign expenditure by stooping vehicle import for 2 years, BUT contradicting that It is same time trying import BEEF from outside, which will make the government to spend foreign currency.. and put our BEEF production down and the farmers to lose their profit.

    Funny way of handling the issues...

    Racism blinds the eyes and brains.

    ReplyDelete
  2. Correction: not only cows bulls, and buffaloes as well

    ReplyDelete

Powered by Blogger.