Header Ads



அஸ்ரப் மு.கா. வை ஆரம்பிக்க, ஜெயபாலனின் புத்தகமும் காரணம்


- ஜெயபாலன் -


இலங்கை முஸ்லிம்களின் அரசியலில்  ஒரு மை கல்லாக திகழ்ந்த மர்ஹூம் எம்.எஹ்.எம்.அஸ்ரப் என்ற கட்டுரை வாசித்தேன். அஸ்ரப்பை நன்கு உணர்ந்தவன் என்கிற அடிப்படையில் சில ஆக்கபூர்வமான விமர்சனங்களோடு யப்னா முஸ்லிம் சஞ்சிகையின் கருத்தை ஆதரிக்கிறேன். 


தோழர் அஸ்ரப் அவர்களை புரிந்து கொள்வது இலகுவல்ல. என்னுடைய “முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும்” புத்தகமகத்தை அஸ்ரம் கையெழுத்துப் பிரதியாக வாசித்தார். அந்த புத்தகம்  தன்னை பாதித்ததாகவும் அதுவும்  மு.க ஆரம்பிக்க ஒரு காரணம் என்றும் என்னிடமும் பசீர் , பெளசர் போன்ற வர்களிடமும் கூறியிருக்கிறார்.அஸ்ரப் வரலாற்றில் எனக்கு அக்கறையுள்ளது.  


ஒருபக்கம்சவூதி அரேபிய செல்வாக்குள்ள கடும்போக்கு முஸ்லிம் இளைஞர்களும் மறுபக்கம் கடும்போக்குள்ள தமிழ் போராளிகளுக்கும் மத்தியில் அவரது அரசியல் அகப்பட்டுக் கொண்டது. அத்தகைய ஒரு பதட்டமான சூழலுக்குள் அவர் அரசியல் செய்ய நேர்ந்தமை துரதிஸ்ட்ட வசமானதாகும். 


1980பதுகளிம் முதற் பாதியில் கிழக்கு மாகாணத்தில் உருவாகிய பாரம்பரியமற்ற தமிழ் போராளிகளுக்கும் அரபு  நாடுகளின் செல்வாக்குள்ள  பாரம்படியமற்ற  முஸ்லிம் இளைஞர்களுக்கும் மத்தியில் மாட்டிக்   கொண்டார். அதுதான் தமிழரதும் முஸ்லிம்களினதும் துரதிஸ்ட்டம். அல்லது செல்வநாயகம்த்தின் தமிழரசுக் கட்ச்சிபோல ஊர் வாதத்தை உடைத்து கீழ்மட்ட  கட்ச்சி கிளைகளின் பங்களிப்போடு  தலைவர்களின் கைகளில் அதிகாரமுள்ள வகையில் கட்ச்சியை ஆரம்பித்திருக்கக்கூடும்.


1981 அம்பாறைக் கலவரத்தின்போது இரவிரவாக எனது புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியை வாசித்து உரையாடும்போது அப்படித்தான் பேசினோம்.     


1985ம் ஆண்டு அம்பாறை மாவட்ட கலவரத்தின்போது ”முஸ்லிம் என்று சொல்ல நான் வெட்கித் தலை குனிகிறேன்”  என விட்ட அறிக்கை முக்கிய வரலாற்று ஆவணம்.  ஆனால் அதுபற்றி யாரும் பேசுவதில்லை. கலவரத்தின்பின்  பாரம்பரியமற்ற இளம்  கடும்போக்காளர்களை கட்சியில் இருந்து விலக்குவதற்க்குப் பதிலாக தான் கட்ச்சியை  விலகி கொழும்பு சென்றார்.  பின்னர் சமரசம் செய்துகொண்டு அரசியலுக்கு   திரும்புகிறார். 


முஸ்லிம் மேட்டுக்குடிகளுக்கு எதிராக எழுந்த படித்த இளைஞர்கள் (அவர்களுள் கணிசமானவர்கள் அரபு நாடுகளின்  செல்வாக்குள்ளவர்கள்) அவர்கள் ஒருபக்கத்தில் தோழர் அஸ்ரப்பை ஆதரித்தாலும் முஸ்லிம் மக்களிடையே பாரம்பரியமற்ற முரண்பாடுகளுக்கு   வழிவகுத்தார்கள்.    ஊர்வாதத்தம் பலப்பட்டது..  முஸ்லிம்களை  சவூதி மற்றும் வளைகுடா நாடுகளின்  செல்வாக்கும் முரண்பட வைத்தது. இதுதான் அஸ்ரப் அரசியல் செய்த காலத்தைய துரதிஸ்ட்ட வசமான சூழல்.


இந்தச்சூழலில் தோழர் அஸ்ரப்பை சந்தித்த ஒரு சில சமயங்களில் கட்ச்சியை செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியைப்போல கீழ் மட்டத்தில் இருந்து அதிகாரமுள்ள கிழைகளின் அடிப்படையில் ஜனனாயக ரீயாக கட்டுங்கள் என வலியுறுத்தினேன். அத்தகைய அதிகாரப்பரவலுள்ள கீழ்மட்ட கிழைகள்தான் தமிழர் மத்தியில் ஊர்வாதத்தை உடைக்க பயன்பட்டது. ஏனோ தோழர் அஸ்ரப் அந்த நிலைபாட்டை எடுக்கவில்லை. எல்லா பிரதேசங்களிலும் ஊர் பிரமுகர் வட்ட தலைமை உருவாக்குவது ஊர்வாதத்தை பலப்படுத்தும் என எச்சரித்திருக்கிறேன். 


அஸ்ரப் அவர்கள் திரு செல்வநாயகம் போன்ற ஆழுமை என்பதில் எனக்கு சந்தேகம்  இல்லை. . ஆனால் செல்வநாயகம் ஊர் பிரமுகர்களுக்கு பதிலாக கீழ் மட்டக் கட்சிக் கிளை  தலைவர்களை உருவாக்கினார்.  அவர்களது பங்களிபோடுதான் கட்ச்சியை  நடத்தினார். அடிப்படையில் தமிழரை இணைத்ததால் வெற்றார். எதிர்கால முஸ்லிம் தலைமை கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் இவை.

1 comment:

Powered by Blogger.