Header Ads



வசீம் தாஜூடீன் கொலை தொடர்பான, விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் - கெஹெலிய


சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரதுங்க மற்றும் வசீம் தாஜூடீன் ஆகியோரின் கொலை சம்பந்தமான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் எந்த வகையிலும் தற்போதைய அரசாங்கம் அதற்கு அழுத்தங்களை கொடுக்காது எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.


இந்த கொலைகள் சம்பந்தமாக 2014 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கின்றேன். கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த 5 ஆண்டு காலம் இருந்தது எனவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.


கேள்வி - லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜூடீன் ஆகியோரின் கொலைகள் குறித்து விசாரணை நடத்துவதாக கடந்த அரசாங்கம் கூறியது, தற்போதைய அரசாங்கம் அது பற்றி கூறவில்லையே?


நீங்கள் அது பற்றி கடந்த அரசாங்கத்திடம் கேட்க வேண்டும். கடந்த அரசாங்கமே இது தொடர்பான பொறுப்பை எங்கள் மீது சுமத்தியுள்ளது. அது குறித்து விசாரிக்க அவர்களுக்கு 5 ஆண்டுகள் இருந்தது. நாங்கள் அந்த குற்றச்சாட்டை மறுத்தோம்.


சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்துடன் எங்களுக்கு தொடர்பில்லை. இது குறித்து விசாரணை நடத்தும் தேவை எமக்கும் உள்ளது. உலகில் சில கொலைகள் நடந்துள்ளன. எனினும் இறுதி தீர்ப்புகள் எதுவும் வழங்கப்பட்டதில்லை. இதற்கு இலங்கையில் நியாயத்தை வழங்க எதிர்பார்க்கவில்லை.


இந்த சம்பவங்கள் காரணமாகவே 2014 ஆம் ஆண்டு அரசாங்கம் மாறியது. இது கடந்த நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வர காரணமாக அமைந்தது. அனைத்து தேர்தல்களிலும் அவர்கள் தாஜூடீன் கொலை பற்றி பேசினர்.


ஒரு சட்டம் ஒரு நாடு என்ற திட்டத்தின் கீழ் நியாயம் நிறைவேறும். நீதியை நிலை நாட்டும் நிறுவனங்களின் கீழ் இவை முன்னெடுத்துச் செல்லப்படும். எவற்றுக்கும் நாங்கள் அழுத்தம் கொடுக்க மாட்டோம். இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு விசாரணை செய்யும் நிறுவனத்தின் கடமை.


இதனை செய்யுங்கள், அதனை செய்ய வேண்டாம் என்று எங்களால் கூற முடியாது. அப்போது நாங்கள் சர்வாதிகாரிகளாக மாறிபோவோம். அவற்றை முன்னெடுத்துச் செல்ல அந்த நிறுவனங்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். விசாரணைகளை நிறைவு செய்ய முடியாது என்றால், அதற்கான காரணத்தை முன்வைக்க வேண்டும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. The Biggest Mistake the Previous Govt. made was to soft pedal on its Promise to bring to book the Murderers and Criminals of the Regime prior to 2015. If only the Previous Govt. paid serious attention to its Promises and Punished the Murderers and Criminals, there would have been No SLPP Govt. today and jokers like Keheliya wouldn't have been seen or heard. What an Agony it is to see and hear these jokers, thanks to Ranil and Sirisena.

    ReplyDelete
  2. INDA THAJUDINUDAYA MARANITHA UDALAI
    THIRUMBA, THIRUMBA THONDI EDUTHU
    YAHAPALANA ARASHANGAM SHEITHA KODUMAIKAL POTHAATHA.
    YA ALLAH, PAAVAM INDA JANAZA.

    ReplyDelete
  3. Why you need an inquiry?Just say "He was murdered by himself.Its possible in this country of ours

    ReplyDelete

Powered by Blogger.