Header Ads



உள்நாட்டு பசும்பால் தேவையை, பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி


உள்நாட்டு பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு அரச, தனியார் துறைகள் மற்றும் சிறியளவிலான பண் ணையாளர்களை இணைத்து குறுகிய மற்றும் நீண்டகால திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோத் தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

புல் வகைகளை வளர்த்தல், கறவை பசுக்களை இனப் பெருக்கம் செய்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் சேவைகளை மேம்படுத்தி விரைவாக இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் தேவையை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரி வித்தார்.

நாட்டின் வருடாந்த பால் தேவையில் 40 வீதத்திற்கும் குறைவான அளவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப் படுகின்றது. போசணையுள்ள சுத்தமான பசும்பாலை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இதன் காரணமாக மக் களுக்குக் கிடைப்பதில்லை.

அடுத்த பத்து ஆண்டுகளில் பசும்பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் ஜனா திபதி உறுதியளித்திருந்தார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பொருத்தமான கற வை இனங்களை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான ஆராய்ச்சிகளை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர் பார்த்துள்ளது.

பசும்பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு உயர் தரம் வாய்ந்த புல் வகைகளை வளர்த்தல் மற்றும் பசுக்களுக் கான உணவுகளை உற்பத்தி செய்வது குறித்தும் விரி வாகக் கலந்துரையாடப்பட்டது.

பாரம்பரியமாக நடத்திவரும் விலங்கு பண்ணைகளை மக்களின் முறைப்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு உரிய விசாரணைகள் இன்றி மூடிவிடக்கூடாதென பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பால் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக்கொண்டு 15 தோட்டக் கம்பனிகளின் பங்களிப்புடன் 15,000 கறவைப் பசுக்களை இனப்பெருக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

முட்டை, கோழி இறைச்சி மற்றும் அதனுடன் தொடர் புடைய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2020 ஆம் ஆண்டு 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்டுவதற்கு எதிர்பார்ப்ப தாகத் தனியார்த் துறை முதலீட்டாளர்கள் தெரிவித்தார்.

1 comment:

  1. மாடு அறுக்காமல் ஒரு வருடம் இருந்தால் பால் பிரச்சினை தீரும்.

    ஆளுக்கு ஒரு பசு வீதம் இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.