Header Ads



வானில் இருந்து வலை விழுந்ததா..? பார்வையிட முண்டியடிக்கும் மக்கள் - சிலாபத்தில் சம்பவம்


சிலாபம் - ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின் தலைவர் துஷான் அபேசேகர தெரிவித்துள்ளார்.


இந்த மீன் வலை கிழே விழும் போது அடை மழை பெய்துள்ளது. 250 அடி நீளமும் 300 கிலோ கிராம் நிறையும் கொண்ட இந்த வலை வானில் இருந்து விழும் காட்சியை பலரும் அவதானித்துள்ளனர்.


இந்த சம்பவத்தை முதலில் பார்த்தவர், இந்த மீன் வலை வானில் இருந்து சிலாபம் நோக்கி வருவதை கண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் வலையை கொண்டு செல்ல முயற்சித்த போதிலும், நகர சபையின் பாதுகாவலர் அதற்கு இடமளிக்காமல் சபையின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.


இந்த வலையின் சிறப்பு என்னவென்றால், முடிச்சுகள் இல்லாதது மற்றும் கிழிந்தவுடன் மீண்டும் தைக்க இயலாது என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் இது இலங்கை மீனவர்கள் பயன்படுத்தாத வலை என நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்.


நைலோன் நூலினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வலை சீனா, தாய்வான் அல்லது இந்தியாவிற்கு சொந்தமானதாக இருக்க கூடும் என அவர் கூறியுள்ளார்.


இதனை பார்ப்பதற்காக பாரியளவிலான மக்கள் அவ்விடத்தில் கூடியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.