Header Ads



தீப்பிடித்து எரியும் கப்பலால், இலங்கை கடற்பரப்பில் மோசமான பாதிப்பு - அதிகாரிகள் கவலை


இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எரிபொருளுடன் கப்பல் தீப்பற்றி எரிவதன் காரணமாக ஏற்படக்கூடிய பாரிய சூழல் பேரழிவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் இலங்கை கடற்படை விமானப்படையுடன் ரஸ்ய இந்திய கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கப்பலின் அனைத்து பகுதிகளுக்கும் தீ பரவியுள்ளதாகவும் இதன் காரணமாக சூழல் பாதிப்பு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பலில் தீப்பிடித்துள்ளதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு;ள்ளதாக கடலோர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

நிலைமை மோசமடைந்தால் இலங்கையின் வடக்குகிழக்கு மற்றும் தென்பகுதி கடற்பரப்பில் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனகடலோர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட கப்பலில் 1700 தொன் டீசல் உள்ளது என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் இந்த எரிபொருள் கசியக்கூடும் என தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் 23 பணியாளர்களில் 19 பேர் வெளியேற்றப்பட்டனர் பின்னர் தலைமை மாலுமியும் துணை மாலுமியும் வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீப்பிடித்த கப்பலிற்கு அருகில் காணப்பட்ட கப்பல் ஒன்றிலிருந்தே தகவல் கிடைத்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படை தனது கப்பல்களை பயன்படுத்தியது விமானப்படைஇணைந்துகொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் காணப்பட்ட ரஸ்யாவின் இரு யுத்தக்கப்பல்களும் இலங்கை கடற்படையுடன் இணைந்துகொண்டன என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. ....“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”...
    (அல்குர்ஆன் : 5:32)

    ReplyDelete

Powered by Blogger.