Header Ads



அஸ்ஸுதைஸ் அவர்களைச் சுற்றி, ஏன் இவ்வளவு சர்ச்சைகள்..?


- Ismail Najee Manbayee -

அஷ்ஷைக் சுதைஸ் அவர்கள் உலக முஸ்லிம்களால் பெரிதும் நேசிக்கப்படும் ஒரு ஆளுமை 

அவரைப்பற்றிய ஒரு சிறிய குறிப்பு

தனது 12ம் வயதில் குர்ஆனை மனனம் செய்தவர் .1979ல்பட்டபடிப்பை முடித்தார் பின்1983ல் ஷரியத் தொடர்பான டிகிரியை ரியாத் பல்கலைகழகத்தில் பெற்றார்.ummul qura university ல் துணை பேராசிரியாராக பணியாற்றும் போது இஸ்லாமிய ஷரியத் தொடர்பான Ph.D முடித்தார்

தனது குத்பா உரையில் உண்மையை உறக்கச் சொல்பவர் எனக்கூறப்படுபவர்

  19/04/2002ல் #அல்அக்ஸா_உதவிக்கு #அழுகிறது எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பலஸ்தீனுக்கு உதவிகள் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார்

இப்பொழுது செய்து கொண்டிருப்பவர்

அப்பொழுது ஜும்மா உரையில்

யூதர்களை குரங்களாக. பன்றிகளாக அல்லாஹ்மாற்றிய வரலாற்றை எடுத்துரைத்து அவர்கள் மீது அவர் சாபமிட்டது பெறும் பரபரப்பாக பேசப்பட்டது

அதனால் கோபமடைந்த அமெரிக்கா தன் நாட்டில் நடைபெறவிருந்த கான்ஸ்பிரஸில்  கலந்து கொள்ள  அவருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்தது

 கனடாவும் தடை செய்தது

2006 ம் ஆண்டு சவூதிஅரபியாவில் பெறும் வரட்சி ஏற்பட்டது

அதற்காக மழை வேண்டி தொழுகை நடந்தபோது சவூதி நாட்டினரை

கடுமையாக சாடினார்

லஞ்சம்,பொய்,மோசடி போன்ற பாவங்கள் தான் இந்த வரட்சிக்குக் காரணம் என்றும் குறிப்பாக சவூதி பெண்களிடம் முறையான ஹிஜாப் இல்லை என்றும் ஆண்களுடன் கலந்து பணிபுரிகிறார்கள் என்றும் அவர்களிடம் இஸ்லாம் வலியுறுத்தும் ஒழுக்கம் இல்லை என்றும் பேசியது அவர் மீது மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்தியது

மிக இளவயதிலேயே ஹரீம் ஷரீபின் இமாமாக நியமிக்கப்பட்ட ஷைக் சுதைஸ்

 40ஆண்டுகாலமாக இமாமாக  இருக்கிறார்

மக்கா மதீனா ஹரம்களின் நிர்வாகத்

தலைவராக இருக்கிறார்.

இது ஒரு அமைச்சருக்கு நிகரான பதவி.

இத்தகைய பல சிறப்புகள் உள்ள ஆளுமையான  இமாம் சுதைஸ் அவர்கள் செப்டம்பர் நான்காம் தேதி  ஜும்ஆ உரையில் குறிப்பிட்ட சில செய்திகள் அவர் மீது பல விமர்சனங்களை வைக்க வாய்ப்பாக அமைந்தது 

ஹிஜ்ரி ஆண்டு சிந்தனை யாக அகீதா  எனப்படும்கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் 

தவ்ஹீதில் எள்ளளவும் சமரசம் செய்யக் கூடாது .எல்லாம் அல்லாஹ்வால் தான் நடக்கிறது நடக்கும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும் . அவனிடமே நம் தேவைகளை நிறைவேற்ற பிரார்த்தனை செய்யவேண்டும்

வலிமார்களின் மண்ணறை க்குச் சென்று நம் தேவைகளைக் கேட்பது நமது அகீதா விற்கு முரணானது என்றார் 

அடுத்து அவர் பேசுகையில் அல்வலா அல் பரா எனப்படும் உறவு கொள்வது பகைமை கொள்வது என்ற கொள்கையை 

தனிநபர் மற்றும் சர்வதேச நல்லுறவுகளுடன் இணைத்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்றார்

முஸ்லிமல்லாதவர்களுடன்  நாம் நல்லுறவை மேம்படுத்த வேண்டும்

لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏

தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்.

(அல்குர்ஆன் : 60:8)

என் அல்லாஹ் சொல்கிறான்

 அஸ்மாபின்த் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹா  அவர்கள் "என் தாய் இணைவைக்கும் முஷ்ரிக்காக இருக்கிறார் அவருக்கு  நான்  என்கடமையைச் செய்யவேண்டுமா எனக்கேட்டபோது நபிகளார்ﷺ அவர்கள் ஆம் என்றார்கள்.

கைபர் போர்களத்தில் யூதர்களிடம் கனிவுடன் நடந்து கொண்டார்கள்.

அது அவர்கள் இஸ்லாமை ஏற்கக் காரணமாக அமைந்தது

நபிகளார் மறையும் போது அவர்களின் கேடயம் ஒரு யூதரிடம் இருந்தது என்றால் அவர்கள் எவ்வளவு நல்லுறவைப் பேணியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம் என இமாம் தனது உரையில் குறிப்பிட்டார்கள்

இந்த  உரை உலக முஸ்லிம் மக்களுக்கு மத்தியிலே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது 

எந்த ஜும்மா மேடையில் இருந்துகொண்டு யூதர்களை சபித்தாரோ அதே மேடையில் இருந்து கொண்டு யூதர்களுடன் நல்லுறவு கொள்ள வேண்டும்  என இமாம் பேசியது யுஏஇ  வழியில் இஸ்ரேலுடன் நல்லுறவு கொள்ள சவுதி அரசாங்கம் முயற்சி செய்வதை இமாம் ஆதரிக்கிறார் என்றுதானே பொருள் என்று எதிர்ப்பாளர்கள் ஆத்திரப்படுகிறார்கள்

இக்கருத்தை ஆமோதிப்பது போல் #ஜெருசலம்போஸ்ட் என்ற யூதப் பத்திரிகை இஸ்ரேல் நாட்டுடனான  நல்லுறவுக்கு வழிவகுக்கின்றது இமாமுடைய உரை என்று தலைப்பிட்டது

 இமாம் அவர்கள் தனது இரண்டாவது குத்பா உரையில் முஸ்லிம்களின் முன்னுரிமை பலஸ்தீன விடுதலையாக இருக்க வேண்டும் என்றும் இந்த டிஜிட்டல் உலகத்தில் மிகவும் ஹிக்மத்தாக நடந்து கொள்ளவேண்டும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது

அண்மை  காலமாக  #இளவரசர்முஹம்மது பின் சல்மான் முழுக்க முழுக்க இஸ்லாமிய விழுமியங்களுக்கு முரணான பல காரியங்களை அரபு மண்ணில் அனுமதித்துக் கொண்டிருக்கிறார்

 அந்த முகமது பின் சல்மான் எழுதிக் கொடுத்த உரையைத் தான்  இமாம்  வாசித்தார் என்று எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள் 

மிகச்சிறந்த ஆளுமையான இமாம் சுதைஸ் அவர்கள் இந்த அளவு  இறங்கி வந்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பதை அவர் மீது பாசம் கொண்டு இருக்கின்ற  மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை

ஏற்கனவே அரசிற்கு எதிராக பேசிய பல இமாம்கள், சமூக செயற்பாட்டாளர்கள்

கைது செய்யப்பட்டு அவர்களின் நிலைமை என்னானது என்று தெரிய இயலா இரும்புத் திரை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

அல்லாஹ்தான் சவூதியை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

وقال السديس في خطبته “من التنبيهات المفيدة في مسائل العقيدة، عدم الفهم الصحيح في باب الولاء والبراء، ووجود اللبس فيه بين الاعتقاد القلبي وحسن التعامل في العلاقات الفردية والدولية”.

وأضاف “لا يتنافى مع عدم موالاة غير المسلم، معاملته معاملة حسنة تأليفًا لقلبه واستمالة لنفسه، للدخول في هذا الدين (الإسلام)”.

واستشهد السديس بوقائع حدثت مع النبي محمد صلى الله عليه وسلم في تعامله مع اليهود.

وقال “مات النبي ودرعه مرهونة عند يهودي، وعامل يهود خيبر على الشطر مما يخرج من زروعهم وثمارهم، وأحسن إلى جاره اليهودي ما كان سببًا في إسلامه”.


3 comments:

  1. ALLAAHVUM, SUDAISUM PAARTHUKOLLATTUM.

    ReplyDelete
  2. Al-QURAN: 60:8

    Allah does not forbid you from those who do not fight you because of religion and do not expel you from your homes - from being righteous toward them and acting justly toward them. Indeed, Allah loves those who act justly.

    We Total submit to the WORD of Allah.

    NOTE: Zeonist have expelled our brothers and sisters form their homes and occupied their land. As per the Aya the matter is clear to us from Quran.

    May Allah Protect us and our Palestinians brothers and sisters in Islam.

    ReplyDelete

Powered by Blogger.