Header Ads



'தண்டிக்கும் அதிகாரம் எனக்கு இருந்திருந்தால், பலர் பாராளுமன்றத்தில் இருக்க மாட்டார்கள்'



'குற்றவாளிகளுக்கு , ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் தமக்கு இருந்திருந்தால் ஆளும் கட்சியின் அதிகளவான உறுப்பினர்கள் அங்கு இருக்க மாட்டார்கள்" என்று மக்கள் விடுதலை முன்னிணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


நாடாளுமன்றில் இன்று (08) உரையாற்றிய போது, அவர் இதனைக் கூறினார்.


“எமக்கு அதிகாரம் வந்தால் ஊழல்வாதிகள் யாரும் நாடாளுமன்றத்துக்கு வருவதில்லை. வெள்ளை ஆடை அணிந்திருந்தாலும் அது திருட்டை மறைக்காது.  


1989ஆம் ஆண்டு சம்பவங்கள் நடைபெற்றிருந்தால் தண்டனை வழங்குவதற்கு 31 வருடங்கள் இருந்தன. தண்டிக்கப்பட நாங்களும் விரும்புகின்றோம்.


பழைய முகங்கள் எழுந்திருந்தால் அவர்களை பற்றி நான் சொல்லுகின்றேன்.  புதிய முகங்கள் தொடர்பில் ஞாபகம் இல்லை. எதிகாலத்தில் தேடி பார்க்க வேண்டும்” என்றார்.

2 comments:

  1. Yes. We believe you. Most certainly, you would have gone after the Crooked and Corrupt Parliamentarians and rid the country of Corruption. We sincerely hope that you will be get the opportunity to be in power sooner than later for the good of the country.

    ReplyDelete
  2. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள் சேர்ந்துபோக சிறப்பான கட்சியாக JVP இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.