Header Ads



தூக்கு மேடையை பாராளுமன்றத்திற்கு எடுத்துவந்து, அலுகோசு கடமையை சபாநாயகர் செய்யலாம் - பொன்சேகா


கொலையுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒருவரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தேவையானால் சபாநாயகர் தூக்கு மேடையை நாடாளுமன்றத்திற்கு எடுத்து வந்து பொருத்தி வைக்க முடியும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதடினப்படையில் அலுகோசுவின் கடமையை சபாநாயகர் செய்ய முடியும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா,

இந்த திருத்தச் சட்டம் காரணமாக மிகவும் சிரமப்பட்டு நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த சுதந்திரம் மற்றும் பலம் இல்லாமல் போகும் விதத்தை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை என்பதால் 20வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றோம்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக நாடு முன்நோக்கி செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. இது 19வது திருத்தச் சட்டத்தின் தவறல்ல.

அன்றைய தலைவர்களாக இருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பலவீனம் காரணமாக அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாமல் போனது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. தம்பி முதல் முறையாக ஒரு சிறந்த
    கருத்தை சொல்லி இருக்கிறீர்

    ReplyDelete
  2. தூக்கு மேடைக்கு முன்னதாக வெள்ளம் விரைவாகவே வந்து கொண்டிருக்கிறதது, குற்றவாளிகளையும் அவர்களைப் பாதுகாப்போரையும் நோக்கி!

    ReplyDelete

Powered by Blogger.