Header Ads



மாகாண சபைகளை சிங்கள இராஜ்ஜியங்களின், அடிப்படையில் பிரிக்க வேண்டும் என யோசனை


மாகாண சபைகளின் எல்லைகளை பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை தனக்கு கிடைத்துள்ளது என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய மாகாணசபைகளை சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கவேண்டும் என்ற யோசனை தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய மாகாண சபை முறையை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் விடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளை இல்லாமல் செய்வது என தீர்மானிக்கப்பட்டால் நாட்டை ருகுணு,மாயா, பிகிட்டி என்ற மூன்று மகாணாங்களாக பிரிக்கவேண்டும் என்ற யோசனையும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

கடந்த இரண்டு வருடங்களாக புதிய மாகாணசபைகள் தெரிவு செய்யப்படாத நிலையில் மாகாண சபை முறை எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை நீக்கும் விவகாரம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளஎண்ணியுள்ளதாக சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்திய தூதுவரை சந்தித்து 13 வது திருத்தம் குறித்த கரிசனையை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. தமிழ் பயங்கரவாதத்தை தீனி போட்டு வளர்க்க இந்தியாவால் வலிந்து திணிக்கப்பட்ட மாகாண சபைகள் இலங்கைக்கு தேவையற்றது

    ReplyDelete

Powered by Blogger.