Header Ads



அரசியல் ரீதியாக அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளான அனைவருக்கும் நீதி வழங்குவது பொறுப்பாகும்


அரசியல் பழிவாங்கல்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களை விசாரிக் கும் குழுவின் (2015-2019) முதற்கட்ட அறிக்கை இன்று (02) அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயவே இந்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி 2015-2019 காலகட்டத்தில் அரசு மற்றும் அரை பொதுச் சேவை களில் நிர்வாக மற்றும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்ட மொத்தம் 6ஆயிரத்து 952 நபர்கள் இதுவரை இந்த குழுவிடம் முறையீடு களைச் சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில், ஆயிரத்து 152 நபர்களின் மேல்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள், அவதானிப்புகள் மற்றும் மேலதிக நடவடிக்கைகள் ஆகியவை இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விடயங்களைச் சிலர் முன்வைத் துள்ளனர் இவற்றை ஆராய்ந்து பார்த்தபோது 2015-2019 காலகட்டத்தில் ஏற்பட்ட விடயங்கள் தெரியவந்ததாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு  அரசியல் பழிவாங்கல்களை விசாரிக்கும் குழுவின் தெரிவித்தனர்.

அரசியல் ரீதியாக அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளான அனைவருக்கும் நீதி வழங்குவது இந்த குழுவின் பொறுப்பாகும் என்றும், நிறுவனத்தலை வர்களுக்கு அறிவிக்கும் குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப் படாவிட்டால், அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என பிரதமர் குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த குழுவுக்கு இதுவரை ஆயிரத்து 152 முறையீடுகளை ஆய்வு செய்து 484 கண்காணிப்பு கோப்புகளை பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப் பியுள்ளது.

இந்த குழுவிற்கு 372 முறையீடுகள் கிடைக்கப்பட்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கோவிட் -19 காரணமாக இந்த குழு மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது, விசாரணைகள் தொடர்பாக 34 நிறுவனத் தலைவர்கள் குழுவினரால் அழைத்து வரப் பட்டுள்ளதாக அரசியல் பழிவாங்கல்களை விசாரிக்கும் குழுவின் செயலாளர் சட்டத் தரணி சதுரிகா விஜசிங்க தெரிவித்தார்.

1 comment:

  1. அரசியல் ரீதியாக - ஜனாஸா எரிப்பதன் ஊடான அரசியல் பலிவாங்களுக்கு உள்ளான முஸ்லிம்கள் அனைவருக்கும் நீதி வழங்குவதையும் மக்கள் எதிர்பார்த்துத்தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.