Header Ads



இலங்கை முஸ்லிம்களின் அரசியலில், ஒர் மைற்கல்லாக திகழ்ந்த மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்


இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆராய முற்படும் போது அல்லது முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை ஆராய முற்படும் போது நிச்சயமாக அஷ்ரபின் வரலாறு ஒரு தெளிவான வரலாறாக காணப்படுகின்றது. இலங்கைவாழ் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்;;;;;றை எடுத்து நோக்கும் போது அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக எவ்வித தனித்துவமுமின்றி இலங்கை சுதந்திரமடைந்தது முதல் நான்கு தசாப்தங்களாக பேரினவாத அரசுகளின் பின்னால் வாழ்ந்தும் சங்கமித்தும் இருந்தனர். இதனால் முஸ்லிம்களுக்கென எவ்வித தனித்துவமான அரசியல் இயக்கம் இலங்கையில் தடம் பதிக்கவில்லை. இந்நிலையில் 1976ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகும். 

1976ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாயலுக்குள் நுழைந்த காவல் படையினர் காட்டு மிராண்டித் தனமாக சுட்டதனால்; பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வு பற்றி நாடாளுமன்றத்தில் கதிரைகளில் ஒட்டியிருந்த எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் வாய்திறந்து பேசாது மௌனம் காத்தனர். இவ்வேளையில் அது பற்றி பேசிய ஒரே ஒருவர் தந்தை செல்வா மட்டுமே. இந்நிகழ்வு மர்ஹும் அஷ்ரபின் அரசியல் உணர்வில் மேலும் ஒரு உந்து சக்தியை கொடுத்தது. 

பேரினவாதிகளின் கைகளை பிடித்துக் கொண்டு அரசியல் மேற்கொண்டால் முஸ்லிம்களின் அரசியல், எதிர்காலம் மழுங்கடிக்கப்பட்டுவிடும் என்பதினை தெளிவாக உணர்ந்த அஷ்ரப் தமிழ் பேசும் மக்களுக்காக அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்களுக்காக அம்மக்களின் அரசியல் தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தினை பல புத்திஜீவிகளுடன் ஒன்றிணைந்து 1981ல் தம்மை ஏக தலைவராக கொண்டு உருவாக்கினார். அன்றிலிருந்து இன்றுவரை பல பிரிவுகளும், பிரிவினைகளும் இக்கட்சிக்குள் வந்திடினும் மக்கள் மத்தியில் இது வேரோடியிருக்கின்றமை இக்கட்சியின் தேர்தல் முடிவுகள் தெளிவாக புடம் போட்டு காட்டுகின்றன. 

அஷ்ரப் ஒரு குறுகிய மனித வர்க்கத்தை வைத்துக் கொண்டு தனது அரசியலை மேற்கொண்டார் முஸ்லிம் மக்களின் அரசியல் உணர்வினை கிள்ளி விட்டார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு விருட்சமாக வளர ஆரம்பித்தது. நள்ளிரவை தாண்டியும் மக்கள் மத்தியில் பிரசாரங்களை மேற்கொண்டதுடன் ஈற்றில் வெற்றியும் கண்டதுடன் முஸ்லிம்களின் அரசியல் பயணத்தில் ஒரு தனித்துவ அரசியலையும் அடையாளப்படுத்தினார். 

1981-85வரை அம்பாறை, மட்டகளப்பு மாவட்ட கிராமங்கள் தோறும் முஸ்லிம் மக்களின் அரசியல் தனித்துவத்தை வலியுறுத்தியும் பேரினவாத கட்சிகளையும் அதன் முகவர்களையும் அம்பலப்படுத்தியும் தமிழ் மக்களுக்கெதிரான போக்குகளை விமர்சித்தும் பிரசாரங்கள் மெற்கொண்டார். அஷ்ரபின் அரசியல் வரலாற்றில் கல்முனையில் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் இனமுரண்பாடு அவரை கொழும்பு நோக்கி குடிபெயரச் செய்தது. 

காலங்கள் கடந்தன கொழும்பில் இருந்து கொண்டு முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் பல்வேறுவிதமாக சிந்தித்தார். சவூதியில் இருந்து வந்த எம்.ரி.ஹசன்அலி மற்றும் எம்.ஐ.எம். இஸ்மாயில் ஆகியோர் அஷ்ரபை சந்தித்து முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர் இதில் மருதூர்கனியும் இணைந்து கொண்டார். 

முடிவாக 1986.11.29ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டு 1988.02.11ஆம் திகதி மரச்சின்னதுடன் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது.  அன்றிலிருந்து இன்றுவரையும் இவ்வியக்கம் முஸ்லிம்களின் அரசியல் குரலாக மிளிர்கின்றது. 

1988ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் பல இயக்கங்களின் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் போட்டியிட்டு முழுமையான வெற்றியினை தட்டிக் கொண்டது. அது மட்டுமன்று 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 202,016 வாக்குகளை இலங்கை முழுவதிலும் பெற்ற இக்கட்சி நான்கு ஆசனங்களுடன் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தது. இலங்கையின் வரலாற்றில் ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனத்தில்; அமர்ந்து கொண்டு தனது மும்மொழி பேச்சாற்றலால் அனைவரினது கவனத்தையும் ஈர்த்தார். 1989ல் நாடாளுமன்றம் நுழைந்த அஷ்ரப் பேச்சாற்றலாலும் கனீரென்ற குரலினாலும் நாடாளுமன்றத்தையே அதிரவைத்தார.; தமிழ் பேசும் மக்களின் சுய கௌரவத்திற்காக அன்றைய நாடாளுமன்ற ஆசனத்தை அஷ்ரப் பயன்படுத்திக் கொண்டார்.

இவரது அரசியல் சொல், செயல் வடிவம் கொண்டது 1994.03.01இல் கிழக்கில் பிரதேச சபை தேர்தல் இடம்பெற்றது. திகாமடுல்லை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏதேனும் ஒரு பிரதேச சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியை தழுவுமானானல் தான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சபதம் கொண்டார். முடிவோ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில பிரதேச சபைகளில் தோற்றது. அதனை அடுத்து அஷ்ரப் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

மர்ஹும் அஷ்ரப் அரசியலில் சாணக்கியம் மிக்கவர் 1994.07.01ல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாக்க குமாரத்துங்கவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து அதற்கமைய அன்று நடைபெற்ற 16வது நாடாளுமன்ற தேர்தலில் 09 ஆசனங்களைப் பெற்று இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மையின கட்சிகளின் ஆதரவின்றி பெரும்பான்மை ஆட்சியாளர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்பதினை நிரூபித்தார். 

இலங்கையின் அரசியலில் சேவையின் சிகரமாக திகழ்ந்தார.; இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி இலங்கையர் என்ற அடிப்படையில் பொதுஜன ஐக்கிய முன்னணியினால் கிடைக்கப்பெற்ற சிறந்த அமைச்சு பதவியினூடாக சேவைகளை  செய்தார். ஏழைகளின் இல்லங்களை நோக்கிச் சென்ற அஷ்ரப் அவர்களின் தேவைகளை பல வழிகளிலும் பூரத்தி செய்தார். 

இலங்கைவாழ் முஸ்லிம்களின் கல்வி நிலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 23.10.1995 தனது முழு முயற்சியினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை உருவாக்கினார். 

தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு தொடர்பில் மிகவும் உன்னிப்பாக செயற்பட்டவர். அண்ணன் அமிர்தலிங்கம் ஈழம் பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவார் என்று கூறியிருந்தமை அக்காலத்தின் தேவையாக காணப்பட்டது. அதுபோன்றே தமிழ் இயக்கங்களை அனுசரிக்காத எந்தவொரு தீர்வும் தீர்வாகாது எனக் கூறியிருந்தமை அவர் ஒரு சமாதான பிரியர் என்பதை சுட்டுகிறது. 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இனவாத கட்சி என பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் கருத்துக்கள் தெரிவித்தனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருந்தே தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஆரம்பித்தார் அது மட்டுமன்றி சிங்கள இனத்தவரான அசித்த பெரேரா என்பவருக்கு நாடாளுமன்ற ஆசனத்தை வழங்கி தான் ஒரு இனவாதியல்ல என்பதை நிரூபித்தும் காட்டினார். அஷ்ரபின் மரணத்தை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்ட பிளவுகளும், சர்ச்சைகளும் அஷ்ரபின் இலட்சிய பயணத்தை தெடர்வதற்கு தடைக்கற்கற்களாக அமைந்தது. 

அஷ்ரப் சிறந்ததொரு மனிதராக அனைத்து விடயங்களிலும் விளங்கி புரட்சியை ஏற்படுத்தியுள்ளர். இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் வரலாற்றை கற்பதற்கு அஷ்ரபின் வரலாறு காலத்தின் தேவையாகும். 

எது எவ்வாறாக இருப்பினும் முஸ்லிம் மக்களின் அரசியல் அடையாளத்தை பிரதேசரீதியாக, ஊர்ரீதியாக அடையாளப்படுத்த முனைவது அல்லது பணத்தின் பின்னால் அரசியலை மேற்கொள்வதும் கருத்து முரண்பாடுகளை உட்கட்சி பூசலாக வளர்த்து கொள்வதும் இன்றைய சூழலில் எவ்வகையிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பொருத்தமற்றது இதனை முஸ்லிம் சமூகமும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் சீரியதொரு நோக்கத்திற்காக சிறப்பானதொரு கொள்கைக்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுக்க வேண்டியது அவர்களின் கடமை என்பதை அவர்கள் நினைவிறுத்திக் கொள்ள வேண்டும் முஸ்லிம் அரசியல் வாதிகள் தவறான வழிகளில் கொள்கைகளை விட்டு நெறி பிறழ்ந்து செல்லும் போது அதனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காது முஸ்லிம் சமூகத்தின் இருப்பை பாதுகாத்து கொள்வதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் தன்னாலான பங்களிப்புகளை வழங்க வேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது. இதுவே மர்ஹும் அஸ்ரபிற்கு செய்யும் கைமாறாகும். 

அஷ்ரபினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழந்ததினைத் தொடர்ந்து பிரதேசவாரியாகவும், தனிப்பட்ட விறுப்பு வெறுப்புக்களுடனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் பல சிதறல்களாக சிதறியும், சுகபோக அரசியலின் பின்னாலும் சென்று கொண்டிருப்பதைக் காணலாம். கொட்டும் மழையிலும் வாட்டும் வெயிலிலும் கடற்கரை வீதிகளில் மக்களை ஒன்று சேர்ந்து ஊர் ஊராக சென்றும் தாய்மார்களின் குழவை வாழ்த்துக்களாலும் வளர்த்தெடுக்டகப்பட்ட இக்கட்சி இன்றும் குழந்தை வடிவத்திலேயே தவழ்ந்து செல்வதனை காணலாம். 

இருந்தபோதிலும் மக்கள் மனதில் மாறாத நினைவாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கின்றது இதற்கு அஷ்ரப் போட்ட அடித்தளமே காரணம் என்றால் மிகையாகாது. அஷ்ரப் உலகை விட்டு பிரிந்து 20வருடங்கள் ஆனாலும் மக்கள் உள்ளங்களில் அஷ்ரப் என்ற ஒரு தலைவனுக்கு என்றுமே சந்ததி சந்ததியாக நீங்கா நினைவலைகள் நிலைத்திருக்கும்.    

இலங்கையில் வாழ்கின்ற குறிப்பாக வட கிழக்கில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் பல பிரிவுகளாக பிரிந்து நின்று அரசியல் செய்வதை விடுத்து அனைவரும் ஒரு அணியில் ஒன்று சேர்நது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை வளர்த்தெடுப்பதே மர்ஹும் அஷ்ரபிற்கு செய்யும் மாபெரும் கைமாறாகும் இல்லையெனில் அன்று அஷரப் சொன்னதைப் பொன்று கிளிக்குஞ்சுகளாக அரசாங்கங்களின் பின்னால் இருக்க வேண்டிவரும் என்பதே யதார்த்தமாகும். 

யா அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்குவாயாக! 

ஏ.ஏ.பளீல்

உதவி ஆணையாளர்

உள்நாட்டு இறைவரித்திணைக்களம் 


8 comments:

  1. A man who is the root cause for all these current issues against Muslums... creating a separate party saying Quran is our constitution. Idiot.

    ReplyDelete
  2. It is completely wrong to blame Ashraff for the current issues. There was no independent voice for the injustice for the Muslim community like Indo-Lanka pact and no representation for Muslims in All party conference. Nobody blame Tamil party leaders 30 years war and still they are representing their rights.
    We have to blame Sri lankan leaders for their oppurtunity politics to create problems. We can see everywhere in the world for minority representation that is not a problem but the way it looks in different angle.

    ReplyDelete
  3. @ MMK: What you say is true. Muslims were slaves before. They are still same today. They must be forever. Leaders like you are needed to train them to live like this.
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முஸ்லிம்கள் அன்றும் அடிமைகளாக இருந்தார்கள். இன்றும் இருக்கின்றார்கள். இனி என்றும் இருப்பார்கள். அவரகளை இப்படி வாழ்வதற்கு பயிற்சி கொடுக்க உங்களைப்போன்ற தலைவரகள் மிகவும் அவசியம்.

    ReplyDelete
  4. ??? MMK ???,

    It is not proper to insult person this way.

    Mr.MMK, You have the right to think your own way. BUT still many hundred thousands of Muslims in this country respect him and thank his service. He may be wrong in certain issue but not as you call him.

    Insulting a person who already dead.. by this words, will reflect our personality...

    ReplyDelete
  5. இவரின் கொள்கைகள் நற்றாய் தான் இருந்தன.

    தூரநோக்கு சிந்தனை இல்லாமல் போய் விட்டது தான் செய்த தவறு.

    முஸ்லிகள் பெரும்பான்மை கட்சிகளுடன் இல்லாமல் தனி முஸ்லீம் கட்சி அமைத்தது வரலாற்று தவறாகி விட்டது போலும்.

    ReplyDelete
  6. It seems you are an utter foolish? Mr.MMK

    ReplyDelete
  7. எஸ்.எல்.எம்.சி "போராலிகல்" மற்றும் வடக்கு கிழக்கின் "பாமரமக்கல்" மற்றும் பிற மாகாணங்களில் வசிப்பவர்கள், அமன் அஷ்ரப்பை எஸ்.எல்.எம்.சியின் (SLMC), ருவான் விஜேவர்தனமாக்க முடியுமா? இலங்கை முஸ்லீம் அரசியல் விளையாட்டு மைதானமான முஸ்லீம் அரசியல் திருப்புமுனையாக அது இருக்கும் இன்ஷா அல்லா. பாராளுமன்றத்தில் ஏற்படும் மாற்றங்களை அரசாங்கம் சிந்தித்துப் பார்க்கிறதென்றால், அடுத்த பொதுத் தேர்தல்கள் வரை இன்ஷா அல்லாஹ் அமன் அஷ்ரஃப்பை "பரிந்துரைக்கப்பட்ட எம்.பி." யாக நியமிப்பது பயனுள்ளது.
    Noor Nizam, Peace and Political Actvist, Political Communication Researcher, SLPP/SLFP Stalwart, Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  8. THOSE who lick the plates, Used to blame Muslim Leaders for starting parties to fight for the rights of Muslim. They say, that all problems started after Muslims make their own political parties.

    IF So, I would like to ask such fools, to read the history of Srilanka, then WHAT they can say about 1815 racial violence against Muslims in this country?

    Muslims lived all the time supporting central governments in our SriLanka. But when Muslims started to practice ISLAM in its pure form and their population started to grow, they Racist could not tolerate and conducted many violence against us. But still many governments in the past and present failed to stop such violence and to protect us.

    So, People like Ashraf started a party to get our rights. What is wrong in it? These lickers wanted their personal gains and wanted us blindly follow them, and they do not worry practicing our religion or rights of other muslims in this country.

    We Muslims, still love our Srilanka, as a citizen we will work to develop our nation, but we are not ready to live as 2nd class citizens.

    ReplyDelete

Powered by Blogger.