Header Ads



முன்னணி வர்த்தகர் நிமல் பெரேரா தெரிவித்துள்ள விடயம்


எதிர்காலத்தில் இலங்கைக்கும் இறக்குமதி செய்யப்படும் அனைத்தையும் நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கையின் முன்னணி வர்த்தகரான நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.


இவ்வாறான நிலைமை ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமாயின் இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்திற்கு நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செல்ல வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மூடிஸ் என்ற சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையை கீழ் மட்டத்திற்கு தரப்படுத்தியுள்ளமை தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் நிமல் பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.


இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு வருவது கடினமான பணியாக இருக்கும் எனவும் இறக்குமதிகளை நிறுத்துவது தவிர்க்க முடியாத விடயமாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மூடிஸ் நிறுவனம் இலங்கையை B2 மட்டத்தில் இருந்து CAA1 என்ற கீழ் மட்ட நிலைக்கு தரப்படுத்தியுள்ளது.


ஈராக், பெலிஷ், கொங்கோ போன்ற நாடுகளின் வரையில் மூடிஸ் நிறுவனம் இலங்கை தரப்படுத்தியுள்ளது.


இலங்கை கடனை திருப்பி செலுத்தும் விடயத்தில் ஆபத்துடன் கூடிய நாடு என்ற நிலைக்கு வந்துள்ளது.


இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை மீது வைத்திருந்த நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

3 comments:

  1. Sri Lanka's borrowing rate will hit around 13%. Government has no plans at all to improve the situation and barking at the wrong tree. Even small investors have no confidence in the future because of the policies.

    ReplyDelete
  2. இலங்கைத் தீவு தவளைகள் வாழும் கிணறு ஆகி விடக்கூடாது.

    ReplyDelete
  3. தவளைகள் வாழும் நாட்டில்
    தவளை வாழ்க்கை தான் விதி
    உலகம் அறியா மானுடர் நாம்

    ReplyDelete

Powered by Blogger.