Header Ads



இறைச்சி உண்பதால், புற்றுநோய் உண்டாகுமா..?


- Dr PM Arshath Ahamed MBBS MD PAED -

சிவப்பு இறைச்சி (Red Meat) மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை (Processed Meat) சாப்பிடுபவர்களிடையே குடல் புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பதப்படுத்தப்பட்ட இறைச்சி நுகர்வு குடல் புற்றுநோய் வருவதற்கான அதிக ஆபத்துடன் உறுதியாக இணைக்கப்பட்டுள்ளது. 

உலக சுகாதார நிறுவனம் ham, salami, bacon and frankfurts போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை முதலாம் வகை புற்றுநோய் தூண்டிகளாக (Group 1 carcinogen) வகைப்படுத்தியுள்ளது, அதாவது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. 

மாட்டிறைச்சி, செம்மறி ஆட்டுக்குட்டி மற்றும் பன்றி இறைச்சி (beef, lamb and pork )

போன்ற சிவப்பு இறைச்சி வகைகள் புற்று நோய்க்கான ‘சாத்தியமான’ காரணம் 

(probable’ cause of cancer ) என்பதாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த வகை உணவுகள் புற்றுநோயைப் உண்டாக்கும் எனபதை விட புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கின்றன என்பதே சரியானது. 

புற்று நோய்க்காரணிகள் எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் புற்றுநோயை ஏற்படுத்தாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு புற்று நோயக் காரணியானது எல்லா நபர்களுக்கும் எப்போதும் புற்றுநோயை ஏற்படுத்தாது, ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு விதமாக அதன் வெளிப்பாடு இருக்கும்.  சில குறிப்பிட்ட மரபணு ஒப்பனை (genetic makeup) கொண்டவர்களுக்கு மட்டுமே அது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக சிகரட் குடிப்பவர்களில் சிலருக்கு மிகச் சிறிய காலத்திலே நுரையீரல் புற்று நோய் ஏற்படலாம், மற்றும் சிலருக்கு பல ஆண்டுகள் தீவிரமாக புகைத்த பின்னரும் புற்று நோய் வெளிப்படாமல் இருக்கவும் கூடும்.

எனவே ஒரு பொருள் அல்லது ஒரு காரணி புற்றுநோயை ஏற்படுத்துவதாக அறியப்பட்டாலும் அல்லது சந்தேகிக்கப்பட்டாலும் கூட, இது எல்லா வகையிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது அரத்தமாகாது. எடுத்துக்காட்டாக, தோல் புற்றுநோய்க்கு அறியப்பட்ட காரணியாக புற ஊதா கதிர்கள் உள்ளன. அதன் முக்கிய ஆதாரமாக சூரிய ஒளி உள்ளது. அப்படியானால் சூரிய ஒளியை தடை செய்வதுதான் இதற்கு பரிகாரமா? 😁

சூரிய ஒளி எப்படி விட்டமின் டி க்கு ஆதரமாக இருக்கிறதோ அது போல சிவப்பு இறைச்சி இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி 12 மற்றும் புரதத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. இவைகள் மனிதனுக்கு தேவையான முக்கிய கனிப்பொருட்களாக இருக்கின்றன. ஆகவே புற்றுநோய் அபாயத்திற்கு பயந்து உணவில் இருந்து சிவப்பு இறைச்சியை முழுவதுமாக நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை, ஆனால்  அவற்றை உண்ணும் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். 

சிவப்பு இறைச்சி புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தலாம், ஏனெனில் இவற்றின் செரிமானத்தின் போது இயற்கையாக உருவாகும் ரசாயனங்கள் குடலைக் கட்டுப்படுத்தும் செல்களை சேதப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது, இது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். இது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளிலேயே  பெரும்பாலும் நடை பெறுகிறது. இதில் கூடுதல் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள் உள்ளன, அவை செரிமானத்தின் போது உடைந்து புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் உருவாகின்றன. மற்றொரு காரணி என்னவென்றால், நிறைய இறைச்சியைச் சாப்பிடுபவர்கள் பழம் மற்றும் காய்கறிகள் அல்லது முழு தானிய தானியங்கள் போன்ற பிற பாதுகாப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பதாகவே காணப்படுகிறது.அதுவுமில்லாமல் இந்த ஆய்வுகளின் படி கேன்சர் வருவதற்கு கிட்டத்தட்ட முக்கால் கிலோ இறைச்சியை ஒருவர் ஒரு வாரத்தில் சாப்பிட வேண்டும். இங்கே நமது ஒரு குடும்பமே அரை கிலோ இறைச்சியை தான் சாப்பிடுகிறது. 

ஆகவே இறைச்சி சாப்பிடுபவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை முற்றாக தவிர்த்துக் கொள்வது நல்லது. அது போல சுட்ட, பொரித்த இறைச்சி வகைகளையும் குறைத்துக் கொள்வது நல்லது. இறைச்சியுடன் சேர்த்து மீன் மரக்கறி பழங்கள் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்வது புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்.

புற்றுநோயை ஏற்படுத்தலாம்(probable cause)என்று வகைப்படுத்தப்பட்ட group 2a சேர்ந்த மாட்டிறைச்சியை தடை செய்ய வரிந்து கட்டிக்கொண்டு நிற்பவர்கள் Alcoholic beverages ,Coke production, Outdoor air pollution ,Tobacco smoking, Rubber manufacturing industry, Salted fish (கரவல), Welding fumes, Wood dust, Leather dust, processed meat  போன்றன உறுதியாக புற்றுநோயை ஏற்படுத்தும் group 1carcinogen ஆக வகைப்படுத்தப்பட்டு இருக்கின்ற  இவைகளை தடை செய்வது குறித்து பேசாமல் இருப்பது என்ன அரசியலோ தெரியவில்லை.🤔

பிற்குறிப்பு.  புற்றுநோய் காரணிகள் carcinogen குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இதை பார்க்கவும். https://www.cancer.org/cancer/cancer-causes/general-info/known-and-probable-human-carcinogens.html

No comments

Powered by Blogger.