Header Ads



வாடகை வீட்டில் இருப்பதை உணர்ந்து, தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் - மெத்தானந்த தேரர்


“இலங்கையின் முதல் சுதேசிகளின் மொழி தமிழ் என்றும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் எனவும் விக்கினேஸ்வரன் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை” எனவும் கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மெத்தானந்த தேரர் அறிவித்துள்ளார்.

விக்கினேஸ்வரனின் அண்மைய நாடாளுமன்ற உரை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“விக்கினேஸ்வரனின் இந்த உரை அப்பட்டமான பொய். இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. மாறாகப் பிரச்சினைகள்தான் உருவாகும். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எனவும், பூர்வீகம் எனவும் நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

தமிழ் மக்களுக்கு இங்கு வாழும் உரிமை இருக்கின்றது. வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டு உரிமையாளருக்குக் குழப்பம் விளைவிக்கக்கூடாது. இதனை தமிழ் மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். பெரும்பான்மையின மக்களுக்கு அவர்கள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது.”

6 comments:

  1. நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம்.
    (அல்குர்ஆன் : 15:23)

    ReplyDelete
  2. You have occupied the Tamil land and saying now rented property 🗣

    ReplyDelete
  3. வாடகைக்கு இருப்பவர்கள்? உலகில் எல்லோருமே இறைவனிடம் வாடகைக்கு இருப்பவர்கள் தான். சாமிகளுக்கு ஏனெப்பா இப்படியான கொழுப்பு? நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?

    ReplyDelete
  4. ஒருவரின் தொல்லை முடிய இன்னொருவன் வெளியாகிறான்.

    ReplyDelete
  5. இவனை போன்ற விஷமிகள் குழுமி இருக்கும் இவ்வரசாங்கம் எவ்வாறு சிறுபான்மையினருக்கு நல்லது செய்யும்? இதை அலிசப்ரி போன்ற பதவி மோகம் கொண்டவர்களால் மடையர்கள் ஆக்கப்படும் எமது சகோதரர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

    ReplyDelete
  6. இவனை போன்ற விஷமிகள் குழுமி இருக்கும் இவ்வரசாங்கம் எவ்வாறு சிறுபான்மையினருக்கு நல்லது செய்யும்? இதை அலிசப்ரி போன்ற பதவி மோகம் கொண்டவர்களால் மடையர்கள் ஆக்கப்படும் எமது சகோதரர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.