September 22, 2020

அனாதரவாக கிடக்கும், அஸ்ரபின் அடக்கத்தலம்


(இப்பதிவை வாசிப்போர் ஏதோ ஒரு வகையில் அஸ்ரப் என்ற தலைவனுக்கு அவசரமாக உதவ முன் வாருங்கள்..)

#அறிமுகம்

வருடா வருடம் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக கருதப்படுகின்றது இது கிழக்கில் பிறந்து முழு தேசத்துக்கும் பணியாற்றிய MHM அஷ்ரப் என்ற அரசியல் தலைவன் மறைந்து மண்ணறைக்கு சென்ற நாள் அவரது இழப்பு எப்போதும் யாராலும் ஈடு செய்யப்படாத இடைவெளியாகவே இன்றும் இருக்கிறது. ஆனால் அவரது அடக்கத்தலத்திற்கு இன்று என்ன நடந்திருக்கின்றது ?? என்பது பற்றிய கண்ணீர் பதிவே இதுவாகும்.

#அநாதை_அடக்கத்தலம்

அஸ்ரப் அவர்களின் உடல் கொழும்பு ஜாவத்தை மையவாடியில்2000 மாம்ஆண்டு அடக்கம் செய்யப்பட்டு 2016ஆம் ஆண்டு வரை ஒரு பலகையால் செய்யப்பட்ட ஒரு மீஸான் பலகை நடப்பட்டு அந்த இடம்  அடையாளம் காணப்பட்டு வந்தது அதனூடாக நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் செல்கின்ற அவரது அன்பர்கள் ஆதரவாளர்கள் சென்று தரிசித்து விட்டு வந்தனர் 

ஆனால் 2016ஆம் ஆண்டின் பின்னர் அந்த குறித்த மீஸான்  அடையாளம் கழட்டபட்டு பின்னர் அந்த இடம் எதுவித அடையாளமும் அற்றதாக மாற்றப்பட்டு இருக்கின்றது அதன் பின்னர் யாரும் அடையாளப்படுத்த முடியாத அநாதரவான ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது 

சாதாரண எந்தவொரு மையவாடியியிலும் ஒரு மையித் நல்லடக்கம் செய்யப்பட்ட  இடத்தில் ஒரு  மண் குவியல்  அல்லது  வேறு அடையாளங்கள் இருக்கும் அதன் மூலம் குறித்த இடத்தை மக்கள் அடையாளம் கண்டு கொள்வர்.இது  ஒரு சாதாரண நிகழ்வு.ஆனால் இவ்வாறான எந்தவிதமான அடையாளங்களும்  இல்லாத ஒரு ஊர்வன வாழும்  புதர்காடாக  அஸ்ரபின்  அடக்கத்தலம் காணப்படுகின்றது

 #கவலையான_விடயம்

அஷ்ரப் அவர்களின் பின்னர் பல்வேறு கட்சிகளும் பல்வேறு அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் உருவாகியிருந்தாலும் இன்று அவரது அடக்கத்தலம் இவ்வாறு அநாதரவாக  காட்சி அளிப்பது மிகவும் கவலைக்குரியதாகும் ,  ஆனால் இதே மையவாடியில் பல பழைமையான கப்றுகள் நிரந்தர அடையாளங்களுடன் இன்றும் உள்ளன. அஸ்ரப் அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்???.எனவேதான் இந்த விடயத்தில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

#முக்கியத்துவம் 

 அஷ்ரப் அவர்கள் ஒரு சமூகத்தின்   தேசிய தலைவராக இருந்தவர் மட்டுமல்ல கிழக்கு மண்ணின் இதயமாக இருந்தவர் அவரது மரணம் அகால மரணம் என்ற வகையில்  அவரது ஜனாஸாவில் கலந்து கொள்ள முடியாத அப்பாவி மக்கள் அவரது ஆதரவாளர்கள் அவரை தங்கள் நெஞ்சங்களில் சுமந்தவர்கள்  இன்றும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கொழும்புக்கு வரும்போது ஜாவத்தை  பள்ளிவாசலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் , எதிர்காலத்திலும் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்திலும் பல்லாயிரம் பேர் உள்ளனர்.

#நடப்பது_என்ன??

பல இடங்களில் இருந்தும் குறித்து அடக்கத்தலத்திற்கு வருபவர்களுக்கு அவ்விடம் பற்றிய எதுவித தகவல்களும்  வழங்கப்படுவதில்லை அந்த வகையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து வரும் பல்வேறு பொதுமக்கள் குறித்த இடத்தை அடையாளம்  கண்டு கொள்ளாமலே வேதனையுடன்  மனம் விம்மி அழுது விட்டு செல்வதாக அங்கிருந்த ஒரு சிலர் குறிப்பிட்டதை கேட்ட போது மிகவும் கவலையாக இருந்தது 

#யார்_காரணம்??

குறித்த  அடக்கத்தலம் பற்றிய அடையாளமாக சிதைவடைந்த மீஸானுக்கு பதிலாக ஒரு புதிய மீஸான் நடுவதற்கு ஜாவத்தை பள்ளிவாசல் நிர்வாகத்தினரில் ஒருசிலர் தடையாக இருக்கின்றனர். 

 குறித்த பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன்  தலைவருடைய மகனாகிய  Aman Ashraff அவர்கள் 2016 ஆம் ஆண்டில் இருந்து குறித்த மையவாடியில் உள்ள தனது தந்தையின் அடக்கதலத்தில்  கற்களினால் செய்யப்பட்ட ஒரு மீஸான் கல்லை நடுவதற்காக அவர் பல்வேறு முயற்சிகள் எடுத்தபோதும் அதற்கான முயற்சிகள் சமய மற்றும் அரசியல் பின்புலங்களால்  நிராகரிக்கப்பட்டு  வந்துள்ளது.அந்த மீஸா ன் அவரது வீட்டில் உறங்கிக்  இருக்கின்றது.

#நாம்_செய்ய_வேண்டியது_என்ன??

அஷ்ரப் அவர்கள் அமானின்  தந்தையாக இருந்ததை விட  இலங்கை முஸ்லிம்களின் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் மாபெரும் தலைவராகவே வாழ்ந்து. உயிர் நீத்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் அந்த வகையில்  இது  கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக அமைய வேண்டும் மட்டுமல்ல  வருடக்கணக்காக அந்த இடத்துக்குச் சென்று பார்க்க வேண்டும் என எண்ணி இன்னும் தமது கனவு பலிக்காது மக்களின் ஈறலை நிறைவேற்றுவதற்கான உதவியாகவும் இது  அமையும்.

#நிர்வாகத்தினரின்_நடவடிக்கை

கிழக்கு மக்களும் ஏனையவர்களும் இந்த இடத்துக்குச் செல்வதற்கான சரியான அடையாளம்  இன்றி  அவதிப்படும் வேளையில்,தலைவரின் அடக்கத்தல விடயத்தில் இதுவரை ஒரு சிலர் பிடிவாதமாக இருப்பது ஏன்??  இது அவரை விரும்பும் மக்களின் ஏகோபித்த உணர்வோடு  விளையாடுவதாகவே  அமைகின்றது 

மட்டுமல்ல ஒரு நீண்டகால சேவையை செய்த ஒரு தலைவனுக்கு எமது சமூகம் இவ்வாறான ஒரு மரியாதையையா  வழங்குகின்றது? என்பது  பலரின் மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது , குறித்த இடம் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இருப்பினது அடையாளங்களில் ஒன்று அது கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் ஆகக்குறைந்தது  குறித்த அடக்கத்தலத்தில்  கற்களினால் செய்யப்பட்ட அடையாள  மீஸானை  நட்டு  அடையாளப்படுத்துவதற்காவது  குறித்த பள்ளிவாசல் நிர்வாகம் அவசரமாக  முன் வர வேண்டும் 

அவ்வாறு முன் வராதவிடத்து   இது தொடர்பான  உயர் மட்டத்திலான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசியல் வாதிகளும்.  பொதுமக்களும், பொது அமைப்புகளும்  முன்வர வேண்டும் அதுவே நாங்கள் அஷ்ரப் அவர்களின் ஞாபகங்களை தொடர் செய்கின்ற ஒரு முக்கியமான பணியாக அமையும் . 

குறித்த விடயம் தொடர்பாக தமது கருத்துக்களை கூற விரும்புவோர் பள்ளி வாசலுடன் தொடர்பு கொள்ளவும்..0112589408

முபிஸால் அபூபக்கர்

சிரேஷ்ட விரிவுரையாளர்


மெய்யியல் துறை பேராதனைப் பல்கலைக்கழகம்

22: செப்டம்பர் 202012 கருத்துரைகள்:

இப்ப என்ன செய்வோம் முபிசால்? கப்று ஒன்றை கட்டி கந்தூர் கொடுத்து அங்கையும் ஒரு கல்லா வியாபாரத்த ஆரம்பிச்சுவிடுவோமா??
அஷ்ரப் ஒரு மனிதன். எல்லோர் போலவும். வாழ்ந்தார் மரணித்தார். அவருக்கு நாம் செய்ய வேண்டியது பிராத்தனை.அதவிட்டுட்டு கபுரு கட்டி பச்சை போர்வையால் போர்த்துவதல்ல.

சகோதரர் முபிஸால் சொல்வது போன்று நாம் அனைவரும் அந்த சகோதரருக்காக துஆ செய்ய கடமைப்பட்டுள்ளோம் அதுமட்டுமல்லாமல் சகல மக்களுக்காக ஸதகத்துல் ஜாரியாவை விட்டுச்சென்றுள்ளார்கள்.இங்கு கவனிக்க வேண்டியது அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக மாற்றிவிடக்கூடாது.

you are trying to politics, others aretrying to do religious duty.

KODAANA KODIKKU ATHIPATHIKALAAKA ANGATHAVARKAL, IRUKKUM UNGA KATCHIYIL
ADIYIL IRUNDU NUNIVARAI,VETKAM ULLAVARKAL ILLAI ENBATHU EPPAVO
MAKKAL ARINDA VISHAYAM.

கேட்க மிகவும் கவலையாக இருக்கிறது, அந்த இடதெதில் உடநடியாக ஒரு சிலை அமைக்க கௌத்தனார் முன் வரவேண்டும்

Gentlemen what more than this you are expecring? Pls visit and see the Jannathul Baqqi in Madina...

ஜாபிர் பின் அப்துல்லா் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : கப்ருகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

நூல் : முஸ்லிம் (1765)

When i was in Sri Lanka i visited there and recited fathiha on his name because i have high regard and respect for his service and sacrifice for the Muslim community.
Please do not look on your religious sectarian angle on this and we want to respect and not worship for him. Leaders to be remembered for ever so need a sign on his burial place.

டாக்டர் ஜாயா. பதியுதீன் மஹ்மூத், ஹமீத் போன்றோருக்குமா?

கடடுரையாளர் முபிஸால் அவரகள் என்ன கூறுகின்றார் என்பதனை வாசகர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு மையவாடியும் ஜனாஸாவுக்குரியவரின் பின்தோன்றல்கள் ஸியாரத் செய்வதற்காக அடையாளப்படுத்த வேண்டும். அந்த எதிர்பார்ப்பில் எந்தப் பிழைகளும் இல்லை. "அஷ்ரப்" அவரகள் யார் என்பது வேறு விடயம். தனி மனிதன் என்ற முறையில் அவருக்கான மரியாதை இங்கு கொடுக்கப்பட்டதா என்பதுதான் இங்கு கேள்வி. இதற்கு பதில் அளிக்க வேண்டியது ஜாவத்தைப் பள்ளி நிர்வாகம். இது எல்லோருக்கும் நடக்கக்கூடியதுதான்.

படித்தவர்களில் பாமர்கள் உண்டு ; என்பதை காட்டும் பதிவு ; கபுறு வணக்கத்தை தூண்டுவதற்காகவோ ; அரசியல் ஆதாயத்துக்காகவோ போட்ட பதிவு மையவாடி பொது இடம் அங்கு அணைத்து கபுராளிகளுக்கும் பிராத்தனை செய்வது சிறப்பு

எல்லா உயிரிழந்தவர்களுக்கும் அடையாளம் வைக்கத்தொடங்கினால் உயிர்வாழ்வோருக்கு வாழ இடமில்லாமல் போகலாமோ?

Post a comment