Header Ads



சுதந்திரகட்சியை பார்த்து கவலையடைகின்றேன், மைத்திரியே அதனை அழித்தார் - சந்திரிகா கவலை



ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலையை பார்த்து துயரடைவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எனது தந்தையால் உருவாக்கப்பட்டு தாயாரால் வலுப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலையை கண்டு கவலையடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சிலவேளைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைக்கு நானும் காரணம் என நான் நினைப்பதுண்டு என தெரிவித்துள்ள அவர் நான் செய்த விடயங்களால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படவில்லை செய்யாத விடயங்களால் தான் பாதிப்பு ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நான் வலுப்படுத்தினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நாட்டை ஆட்சி செய்த காரணத்தினாலேயே சுதந்திரக்கட்சியினால் 23 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி புரிய முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

பலரின் வேண்டுகோள்கள் காரணமாக நான் மீண்டும் 2015 இல் அரசியலில் ஆர்வம் காட்டினேன்,நாட்டினதும் சுதந்திரக்கட்சியினதும் அழிவை காப்பாற்ற முடியும் என நினைத்தே அவ்வா செய்தேன் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பலர் நான் ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்துள்ளேன் என குற்றம்சாட்டினார்கள் என தெரிவித்துள்ள சந்திரிகா குமாரதுங்க பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக்கட்சியை முற்றாக அழித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நீங்கள்தானே அம்மா சும்மா அப்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்த மைத்திரியை கூப்பிட்டு ஜனாதிபதிப் பதவியை தூக்கிக் கொடுத்தீர்கள். யாரும் எங்கும் ஒழித்து ஓடத் தேவையில்லை. நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற விரைந்து செயற்படுங்கள்.

    ReplyDelete
  2. மனைவியோடு கோபித்துக் கொண்டு அடுத்த வீட்டுக் கோழியையே அறுத்தவரல்லவா மை மை மைத்திரி!

    ReplyDelete

Powered by Blogger.