Header Ads



பிளவுபடுதலும், தனிமைப்படுத்தப்படுதலும் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் ஆபத்து


- வ.ஐ.ச.ஜெயபாலன் -


2013 இறுதியில் இன்றைய ஆழும் தரப்பின் உயர் மட்டத்தால் நான் கைது செய்யப்பட்டேன். அவர்கள் என்னை விடுதலை செய்யும் நோக்கத்தில் கைது செய்யவில்லை. அதனால் மிகுந்த வெளிப்படையாக என்னோடு பேசினார்கள். முஸ்லிம்களின் அதிகரித்த பிறப்பு வீதத்தால் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் சிறுபாண்மையாகி வருகிறார்கள்.  முஸ்லிம்களுக்கு எதிராக தமிழரும் சிங்களவரும் இணையவேண்டும் என அவர்கள் கூறியபோது 1950களில் இருந்தே கிழக்கில் சிங்கள குடியேற்றங்களால் சிங்களவரின் சனத்தொகை வளற்ச்சி விகிவிகிதம்தான் அதிகமாக இருக்கு என வாதாடினேன். 


  அதிஸ்ட்டவசமாக 2015ல் அரசு மாற்றம் அடைந்தததால் சிங்கள ஆதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரல் பின்போடப்பட்டது. 2019 ஏப்பிரல் தாக்குதலின்பின்னர் இத்தகைய கருத்துக்கள் சிங்களவரைத் தாண்டி  தமிழர் மலையகத் தமிழர் மத்தியில் மட்டுமன்றி இன்றைய முஸ்லிம் அமைச்சர்கள்போன்ற சில முஸ்லிம்கள் மத்தியிலும் செல்வாக்குபெற்றுள்ளது.   


 சர்வதேச அழுத்தத்தால்  நான் சிறைமீண்டபின் 2014ல் இருந்து வஹாபிகளை தனிமைப்படுத்தி தாக்கும் முயற்ச்சி சிங்கள ஆழும் சக்திகளின் மத்தியில்  கருக்கொள்வதுபற்றி எச்சரித்துவந்தேன். இஸ்லாமிய ஜனநாயக மரபுகள் அங்கீகரித்து   வகாபிகள் சூபிகளோடு சமரசம் செய்வது மட்டுமே முஸ்லிம் மக்களை பலப்படுத்தும் என்றும்  வலியுறுத்தி வருகிறேன்.  இதற்காக நான் மிக மோசமாக முனாபிக் காபிர் என வசைபாடப்பட்டேன். கிரான் சுடலைக்கு மண்வெட்டும் சவள் சகிதம் என்னை அழைத்துச் சென்ற தமிழ் இளைஞர்கள் ’நீ முஸ்களை குழப்புகிறாய்’ என  நெற்றிபொட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்தியபோது  வலித்ததைவிட காபீர், முனாபிக் என்னும்போது அதிகமாக வலிக்குது.


2015ல் நிகழ்ந்ததுபோல அதிஸ்ட்டவசமாக இந்த அரசு மாற்றமடையும் சாத்தியங்கள் எதுவுமில்லை. வகாபிகள் சூபிகளோடு இருந்துபேசி இஸ்லாமிய ஜனனாயக மரபுகளின் அடிப்படையில் விட்டுக்கொடுத்து சமரசமாவது மட்டுமே எஞ்சியுள்ள வழி.  இஸ்லாமிய ஜனநாயக மரபுகளும் அதன் அடிப்படையிலான முஸ்லிம்களின் ஐக்கியமும் மட்டுமே முஸ்லிம்களின் எதிர்காலம் என்பது தெளிவாகிவருகிறது. ஏனைய எல்லா முயற்ச்சிகளும் மேலும் மேலும் தனிமைப் படுத்த்தும். தனிமைப் படுதல் ஆபத்தன்னது. . நீங்கள் மீண்டும் வசைபாடலாம். துப்பாக்கி தாங்கியவர்களின் முன்னே உரத்த குரலில் முஸ்லிம்களுக்காகப் பேச நான் அஞ்சியதில்லை. இப்ப அதே மனநிலையுடன் வசைபாடல்களுக்கு அஞ்சாமல் வக்ஹாபிகள் சூபிகளோடு பேசி இஸ்லாமிய ஜனநாயக மரபுகளின் அடிப்படையில் பிணக்குகளைத் தீர்த்து ஐக்கியப்பட வேணும் என கூவி அழைக்கிறேன்

5 comments:

  1. ஜெயபாலன் அவரகளது கூற்று அன்னாரது தனிப்பட்ட கூற்று. இலங்கை முஸ்லிம்கள் 2001ம் ஆண்டுக்குப் பின்னர் வந்த முஸ்லிம் அரசியலாளர்களால் நல்ல முறையில் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். கண்டதும் எடுத்ததும் எதுவுமில்லை. முஸ்லிம்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்றவகையில் அவரகளுக்கு ஆட்சியாளர்களால் பல வசதிகள் கிடைத்துள்ளன. இனிமேல் முஸ்லிம் அரசியலும் மதவாதப்போக்கில் சென்றால் மட்டும்தான் அரசியல் விமோசனம் கிடைக்கும் என்றால். அவ்வாறு செய்வதற்கும் முஸ்லிம்கள் தயாராக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் மீதான உங்கள் அக்கறை பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  3. Sano, Amirlebbe, Shood MIY, அன்பும் வாழ்த்துக்களும். Shood MIY, நண்ரே முஸ்லிம்கள் என்பது நீங்களும் உங்களைப்போல சிந்திக்கிற 10 பேருமென்றால் நீங்கள் எந்தமாதிரியும் பேசலாம் செயல்படலாம். தாங்கள் மட்டும்தான் முஸ்லிம்கள் என நினைத்து செயற்பட்ட 10 பேரால் ஏற்பட்ட பின்னடைவை இன்னும் சீர்செய்யமுடியவில்லை. அதற்குள் அந்த பத்துப்பேரைப்போல நாங்களும் மதவாதப் போக்கில் செல்லத் தயாராவோம் என்கிறது தப்பல்லா? சில பெளத்த பேரின வாதிகள் மதத்தை வாழ்கை நெறியாகப் பார்க்காமல் வாதமாகப் பார்க்கிறார்கள். தயவு செய்து உங்கள் 10 பேர் நிலைபாட்டை 10 லட்சத்துக்கும் அதிகமான இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கை நெறியாக வளர்த்தெடுங்கள்.தயவுசெய்து உங்கள் தவறான நிலைபாட்டை மீழாய்வு செய்யுங்கள்

    ReplyDelete
  4. திரு ஜெயபாலன் அவர்களின் கருத்தில் நிறைய உண்மையிருக்கின்றதென்பதனை நாங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும், முதலில் எங்களுக்குள் ஒற்றுமை அதனுடன் திரு ஜெயபாலன் போன்ற நடுநிலையான தமிழ்-முஸ்லீம் சமூகம் ஒற்றுமையை வேண்டிநிற்கும் சிந்தனையாளர்களை ஒன்றிணைப்பதன் மூலமே முஸ்லீம் சமூகம் 1977 க்கு முன்பிருந்த சமூக ஒற்றுமையினை மீளக்கொண்டுவரமுடிவதோடு ஆக்கபூர்வமான இன ஒற்றுமைக்கெதிரான பல பிரச்சினைகளை அரசியலுக்கப்பால்நின்று சிந்திக்கவும் மக்கள்மயப்படுத்தவும் தீர்வுகாணவும் முடியும்

    ReplyDelete

Powered by Blogger.