Header Ads



நுவரெலியா - கொழும்பு வீதியில் எள்ளுருண்டை வழங்கி பணம், தங்கம் கொள்ளையிடும் மோசடியாளர்கள்


நுவரெலியா - கொழும்பு வீதியில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அதிகளவு வீரியம் கொண்ட ஒளடதம் அடங்கிய எள்ளுருண்டையை உண்ணக்கொடுத்து, அவர்களிடம் இருந்து பணத்தையும், தங்க ஆபரணங்களையும் கொள்ளையிடும் மோசடியாளர்கள் தொடர்பில் தகவல் வெளிப்பட்டுள்ளது.


அதிகளவு மதுசாரம் கொண்ட ஒளடதம் அடங்கிய எள்ளுருண்டையை உண்டதன் காரணமாக, இரண்டு நபர்கள் உயிரிழந்ததாக நுவரெலியா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சந்தீபன கமகே தெரிவித்துள்ளார்.


குறித்த மோசடியாளர்களால் வழங்கப்பட்ட எள்ளுருண்டையை உண்ட பயணி ஒருவர் தொடர்பில், கிடைத்த தகவலுக்கு அமைய, எமது செய்திச் சேவை அவரை தொடர்புகொண்டு வினவியது.


இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பாக அவர் இவ்வாறு தகவல் வெளியிட்டார்.


குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நுவரெலியா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சந்தீபன கமகே, கடந்த ஆறு, ஏழு மாதங்களில் இவ்வாறாக பாதிக்கப்பட்ட சில நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.


பேருந்துகளில் அறிமுகமில்லாதவர்களினால் வழங்கப்பட்ட ஒரு வகை நச்சுத்தன்மையுடைய உணவை உட்கொண்டு, பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


கொழும்பு - நுவரெலியா மற்றும் கொழும்பு - ஹட்டன் வீதியில் பயணிக்கும் பேருந்துகளில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதியாகினர்.


கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், வழங்கப்பட்ட இரசாயணம் என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டார்.


அதில் அதிக வீரியம் கொண்ட இரசாயணம் வழங்கப்பட்டால், நபர்p ஒருவர் மரணிக்கலாம் என்றும் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சந்தீபன கமகே தெரிவித்தார்.


எனவே, பேருந்துகளில் அறிமுகமில்லாதவர்கள் வழங்கும் எந்தவொரு பொருளையும் பெற்றுக்கொள்ள வேண்டாம் என பயணிகளுக்கு வைத்தி;யர் அறிவுறுத்தியுள்ளார்.


நீண்ட காலமாக இடம்பெறும் இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.