Header Ads



முஸ்லிம் ஒருவர் அடங்கலாக, புதிய அரசியலமைப்பை வரைய 9 பேர் அடங்கிய குழு


புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான 9 பேர் அடங்கிய குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளரான, அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, மனோஹர டி சில்வா, சஞ்சீவ ஜயவர்தன, சமன் ரத்வத்த, பேராசிரியர் ஜீ.எச்.பீரிஸ், கலாநிதி ஏ. சர்வேஸ்வரன், பேராசிரியர் நசீமா கமுறுடீன், பேராசிரியர் வசந்த செனவிரத்ன ஆகியோர் இந்த நிபுணர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. '(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.'
    (அல்குர்ஆன் : 21:107)

    இந்நாட்டில் 70 வருடங்களாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அனைத்தும், இந்நாட்டின் 10% முஸ்லிம்கள் பின்பற்றும் இஸ்லாத்தில், சிங்களவர்கள் தமிழர்கள் அடங்கலாக முழு மனித இனத்துக்குமான இறைவனது அருட்கொடைகளாக உள்ளன. 

    இறை தூதரின் வாழ்விலும் அவர்கள் கொண்டுவந்த வேதமான புனித குர்ஆனிலும் அவை விரவிக் கிடக்கின்றன.  அந்தத் தீர்வுகளை முடிந்த வரை இலங்கை பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தடையும் இருக்க முடியாது.

    அந்த நபியைப் பின்பற்றும் இந்த முஸ்லிம் உறுப்பினர் அந்த அருட்கொடைகளை இந்தக் சபையில் அறிமுகப்படுத்த வேண்டிய அமானிதத்தைச் சுமந்தவராக இருக்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.