Header Ads



முஸ்லீம் அரசியல்வாதிகளை திருப்திபடுத்தவேண்டிய தேவை, மைத்திரியை தவறாக நடத்திய 5 அரசியல்வாதிகள்


அரசியல் தலையீடுகள் காரணமாகவே உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யமுடியவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு தொடர்புபட்ட விவகாரங்களில் அரசியல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 19ம் திகதி இடம்பெற்ற தேசிய புலனாய்வு கூட்டத்தில் ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்ற பின்னர் நாடு திரும்பியவர்கள் குறித்து ஆராயப்பட்டது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடுதிரும்பியவர்கள் காரணமாக தேசிய பாதுகாப்புக்கும் மக்களுக்கும் ஆபத்து காணப்பட்டது,பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் காணப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லீம் அரசியல்வாதிகளை திருப்திபடுத்தவேண்டிய தேவை உட்பட அரசியல் காரணங்கள் காரணமாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐந்து அரசியல்வாதிகள் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தியதன் காரணமாக ஏற்பட்ட பிளவு காரணமாக என்னால தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு இதனை வலியுறுத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


5 comments:

  1. யார் யார் மனித சமூகத்திற்கு எதிரான குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டமை நிரூபிக்கப்படுமிடத்து அவரகளுக்கு சரியான முறையில் பாடம் கற்பிக்கப்பட வேண்டியது சம்பந்தப்பட்டவரகளினமீது சுமத்தப்படும் கடமைப் பொறுப்பாகும். முன்னாள் பிரதமர் SWRD பண்டாரநாயக்க அவரகளைக் கொலை செய்தவரகளுக்கு தண்டனை வழங்கபபட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, முன்னாள் அமைச்சர்கள் காமினி திஸநாயக்க, அத்துலத் முதலி ஆகியோர்களைக் கொன்றவரகள் இனம் காணப்பட்டனர். ஆனால் கொலைகாரர்களாகக் கருதப்பட்டோரின் சமூகம் எந்தவித காழ்ப்புணர்ச்சிக்கும் அல்லது பகைமைக்கும் உள்ளாக்கப்படவில்லை. சஹ்ரானை மையமாக வைத்து அவன் சார்ந்த சமூகத்தினை இழிவுபடுத்துவது முறையல்ல என்பதனை மிகவும் வருத்தத்துடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தாட்சண்யமின்றி அவரகள் தண்டிக்கப்படல் வேண்டும். இது இயற்கை நியதி கூட.

    ReplyDelete
  2. Well Said My Dear Brother...

    If the rule of JUSTICE prevail in this land, They will punish the wrong door, but not a society to which the wrong door belongs.

    ReplyDelete
  3. Well Said My Dear Brother...

    If the rule of JUSTICE prevail in this land, They will punish the wrong door, but not a society to which the wrong door belongs.

    ReplyDelete
  4. From the statement made by the Former Defence Secretary, Hemasiri Fernando, it is Not clear whether the so-called 5 Muslim politicians, prevented any action being taken against Zahran and his terror outfit. But, there are reports of several Muslim civil society leaders making representations to the Authorities about Zahran,s dangerous conduct and calling for action against him and his followers. But, the Security Authorities Failed to take any action. Why? Is it because of Muslim Politicians Or because of some Powerful Forces who Backed Zahran and his outfit as stated by Rauf Hakeem before the PCOL, though he declined to name this Force in Public.

    I.

    ReplyDelete

Powered by Blogger.