Header Ads



33 ஆயிரம் கிலோ மஞ்சள், 3000 கிலோ உளுந்து கடத்தல் - சுங்க அதிகாரிகள் இருவர் கைது


33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையை சுங்க திணைக்களத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் வௌியேற்றியமை தொடர்பில் சுங்க அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையுடன் மூன்று கொள்கலன் பாரவூர்திகளும் மற்றும் மூன்றாயிரம் கிலோ உளுந்து தொகையுடன் 7 லொறிகளும் நேற்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டிருநதது. 


புளுமென்டல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் வாகன தரிப்பிடம் ஒன்றில் சுமார் 40 அடி நீளம் கொண்ட மூன்று கொள்கலன் பாரவூர்திகளில் குறித்த மஞ்சள் தொகை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பில் 10 பேர் புளுமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


குறித்த சட்டவிரோத மஞ்சள் மற்றும் ஏனைய பொருட்கள் டுபாயில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னால் இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மட்டக்குளி பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரால் குறித்த பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.