Header Ads



32 வருட ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் முஹம்மது அலியார் மசூர் (J.P)


- சஹாப்தீன் -

நிந்தவூர் 20ஆம் குறிச்சியை சேர்ந்த சிரேஷ்ட ஆசிரியர் முஹம்மது அலியார் மசூர் ( இலங்கை ஆசிரியர் சேவை தரம் - ஐ) தனது 32 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

இவர் தனது சேவைக் காலத்தில் ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும், நிறைவேற்று அதிபராகவும் சேவையாற்றி இறுதியில் நிந்தவூர் கமு ஃ அல் பதூறியா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவு பகுதித் தலைவராகவும் பிரதி அதிபராகவும் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் 2020.06.29ஆம் திகதி இலங்கை ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

1988.08.07 ஆம் திகதி இலங்கை ஆசிரியர் சேவை நியமனம் பெற்று தனது ஆரம்ப பாடசாலையான நிந்தவூர் கமு  ஃ அல் மினா வித்தியாலயத்தில் தனது சேவையினை ஆரம்பித்தார். இவர்  சொந்த ஊரான நிந்தவூர் உட்பட வெளி ஊர்களிலும் மொத்தமாக் 11 பாடசாலைகளில் சேவையாற்றியுள்ளார். தாம் கடமையாற்றிய அனைத்தப் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.  

மேலும் இவர் மஹரகம தேசிய  கல்வி நிறுவனத்தில் ஆரம்ப கல்வியில் விசேட பயிற்சியினைப் பெற்று தனது சேவைக் காலத்தில் தரம் - 05 புலமைப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மிகத் திறமையாகவும் நுட்பமான முறையிலும் கற்பித்துக் கொடுத்து அம்மாணவர்களை தேசிய பரீட்சையில் சாதனைகளையும் பெறவைத்துள்ளார். 

குறிப்பாக கமுஃஅல் மினா வித்தியாலயம், கமுஃஅல் பதூறியா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் புலமைப்பரீட்சையில் மாணவர்களை 100 வீதம் சித்திபெற வைத்து சாதனையையும், பாராட்டுக்களையும் பெற்றவராவார்.

மேலும் அரசாங்க பரீட்சைத் திணைக்களத்தில் சுமார் 10 வருடங்கள் புலமைப்பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியிலும் மற்றும் க.பொ.த உயர்தரம், கா.பொ.த சாதாரன தரம், தரம் - 05 புலமைப் பரீட்சை போன்ற பொதுப்பரீட்சைகளில் மேற்பார்வையாளராகவும், உதவி மேற்பார்வையாளராகவும், நோக்குனராகவும் சேவை செய்து பரீட்சை திணைக்களத்தில் நன்மதிப்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

இவர் ஆசிரியர் சேவையில் மற்றுமல்லாது சமூக சேவைகளிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டுள்ளார். தற்போது கூட சமூக சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

வறிய மணவர்களின் கல்விக்காக தொடர்ந்து இலவசமாக பிரத்தியோக வகுப்புக்கயையும், கற்றல் உபகரணங்களையும் வருடாவருடம் அல்லாஹ்வின் உதவியால் வழங்கி அவ்வறிய மாணவர்களின் வாழ்க்கைக்கு உரமூற்றியவர் ஆவார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இவரினுடைய தூய்மையான சேவையினை பொருந்திக் கொள்ள வேண்டும் என பிரார்த்திப்பதோடு, அரச சேவையில் ஓய்வு பெறும் இவர் தனது இறுதி மூச்சுவரை ஆரம்பக்கல்வியில் கற்கும் மாணவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளையும், உதவிகளையும் தொடர்ச்சியாக அல்லாஹ்வின் உதவியால் வழங்க வேண்டுமெனவும், நல்ல தேக ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்கி இம்மை, மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் நாம் பிரார்த்திக்கின்றோம்.

No comments

Powered by Blogger.