Header Ads



20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை



- இலங்கை மன்றக் கல்லூரியில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -


தற்போது அரசாங்கம் கொண்டுவந்துள்ள 20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராகவும் இது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட துறை சார்ந்தவர்களை விளக்க படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பது தொடர்பில் இன்று -22- ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த ஊடக மாநாடு இடம்பெற்றது பிரபுத லங்கா அமைப்பு  இதனை ஏற்பாடு செய்திருந்தது சட்டத்தரணிகள் இதன் போது  கலந்து கொண்டார்கள் .

இந்த நாட்டில் தற்போது சர்வாதிகார ஜனாதிபதி ஒருவரை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை தவிர்க்கப்படவேண்டும் மிதமிஞ்சிய இந்த அதிகாரத்தினால் இந்த நாடு அதல பாதாளத்திற்கு செல்லும் என்பது இலங்கைக்குள் மட்டுமல்ல சர்வதேசத்தின் எதிர்ப்பை எமது நாடு சந்திக்க நேரிடும் இதனால் பொருளாதார ரீதியான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பது பற்றிய விவரங்கள் இந்த செய்தியாளர் மாநாட்டின்போது முன்வைக்கப்பட்டது.

இதேவேளை தற்போது ஜனாதிபதியின்  அதிகாரம் கடந்த அரசாங்கத்தை விட அதிகமாக வழங்கப்படுகின்ற பொழுது உயர் நீதித்துறைக்கும் அவரது கையாடல்கள் அதிகமாக இடம்பெறும் என்பதை இதன் போது இவர்கள் சுட்டிக் காட்டினார்கள் எனவே பொதுமக்களை தெளிவுபடுத்தி, வீதிக்கு இறங்கி அரசாங்கத்துக்கு எதிரான  போராட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இந்த அமைப்பு இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டது.  பத்தொன்பதாவது திருத்தச்சட்ட மூலத்தை உரிய முறையில் முன்னெடுத்து இருந்தால் இருபதாவது சட்டமூலம் வந்திருக்காது என்றும் கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொறுப்பற்ற தன்மையினை  இந்த அமைப்பு விமர்சித்து இருந்தது .

இருந்தபோதும் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள முக்கிய விடயங்களை அகற்றாது இருபதாவது சட்டத்தில் உள்ள விடயத்தையும் உள்வாங்கி பாராளுமன்றம் அதிகாரமுள்ள ஜனாதிபதியின் (சில அதிகாரங்கள்) நீதிமன்றத்தின் சுயாதீனம் என்பவைகளை பாதுகாப்பதற்கு தங்களால் ஆன அனைத்து விதமான முயற்சிகளையும் வழங்கயிருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.