Header Ads



நாட்டை காப்பாற்றுவதற்காகவே 20 கொண்டு வரப்பட்டுள்ளது


20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை பூச்சாண்டியாக சித்தரித்து காட்ட சிலர் முயற்சித்து வருகின்றனர் என ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.


ராகமை பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டில் ஏற்படுத்திய நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காகவே 20வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டை காப்பாற்றுவதற்காகவே இந்த திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


20வது திருத்தச் சட்டத்தின் ஊடாக 19வது திருத்தச் சட்டம் முற்றாக நீக்கப்படுவதை தவிர வேறு எதுவும் நடக்காது எனவும் நாலக கொடஹேவா குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. நாட்டை மிகப் பெரும் நெருக்கடியில இருந்து மீள்வதற்கு உள்ள ஒரே தீர்வு 20 திருத்தச் சட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்குவதுதான்

    ReplyDelete
  2. முட்டாள்களே நாட்டின் நெருக்கடியை தீர்க்க 20 எவ்வாறு உதவ போகின்றது?

    ReplyDelete

Powered by Blogger.