Header Ads



20 ஆவது திருத்தத்தில் முஸ்லிம், தீவிரவாத தந்தைகள் யாரும் இல்லை - அமைச்சர் பிரசன்ன


அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி, தழிழ்த் தேசிக் கூட்டமைப்பு, தமிழ் புலம்பெயர் மற்றும் முஸ்லிம் தீவிரவாத தந்தைகள் இருந்தாலும், 20 ஆவது திருத்தத்தில் அத்தகைய தந்தைகள் யாரும் இல்லை என்றும், 20 வது திருத்தம் சட்ட வரைபில் தயாரிக்கப்பட்டது என என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.


19 ஆவது திருத்தத்தை ரத்து செய்து புதிய அரசியலமைப் பைக் கொண்டுவருவதற்காக மக்கள் வழங்கிய ஆணை க்கு ஏற்ப 20 வது திருத்தம் கொண்டுவரப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


20 வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் விரைவில் நாட்டிற்கு ஏற்ற புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.


கம்பாஹா மாவட்டத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


20 வது திருத்தம் தொடர்பாக மக்கள் மத்தியில் பொய் யான கட்டுக்கதைகளை உருவாக்க எதிர்க்கட்சி முயற் சிக்கிறது. 20 வது திருத்தத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அது தொடர்பாகக் கலந்துரையாடக் குழு ஒன்றைப் பிரதமர் நியமித்துள்ளார்.


எனவே, எதிர்க்கட்சி 20 குறித்து தவறான அச்சத்தை எழுப்புகிறது.


இந்த அரசியலமைப்பு திருத்தம் போன்ற விடயங்களை உருவாக்குவதே பொதுவான நடைமுறை. வரைவு சட்டத் துறை அத்தகைய வரைவைத் தயாரித்து சட்டமா அதிபர் துறை மற்றும் நீதி அமைச்சகத்திற்கு அதன் பிரதியை அனுப்பும்.


வாக்கெடுப்புக்குச் செல்லலாமா வேண்டாமா அல்லது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் நிறை வேற்றப்படலாம் என்பதைச் சட்டமா அதிபர் உறுதிப் படுத்திய பின்னரே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் படும்.


முந்தைய நல்லாட்சி பின்பற்றிய முறை இது அல்ல. 19 அரசியலமைப்பு யானை, புலி, நரி கூட்டணியால் செய்யப்பட்டது. அதாவது ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, தமிழ் புலம்பெயர்ந்தோர், தன்னார்வ தொண்டு குழு மற் றும் சுமந்திரன் போன்றவர்கள் தான் 19 ஆவது திருத்த சட்டத்தின் மாமாக்கள் ஆவார்கள்.


அவர்கள் ராஜபக்ஷர்களை அரசியலிலிருந்து நீக்க விரும் பினர். 19 ஆவது திருத்தம் என்பது ராஜபக்ஷர்களை மட்டு மே நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்பு திருத்தமா கும்.


19 சுயாதீன ஆணையகம் சுதந்திரமானவையா? 19 ஆவது திருத்தம் அமைச்சரவையை 30 ஆக மட்டுப்படுத்தியிருந் தாலும், நல்லாட்சி என்பது மக்களை உள்ளடக்கி அமைச்சரவையை அதிகரிக்கவில்லையா? 19 ஆவது திருத்தம் காரணமாக ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டை இருபுறமும் இழுக்கவில்லையா? அந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தவர்களும் அதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார்.


எங்கள் அரசாங்கத்தின் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் 20 வது திருத்தத்தின் சில அம்சங்களை மாற்ற முன்மொழிகின்றனர்.


அது அவர்களின் உரிமை. நாங்கள் ஜனநாயகத்தை மதிக் கும் கட்சி மற்றும் அரசாங்கம் அதனால் தான் பிரதமர் குழுவை அமைத்தார்.


19 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து இந்த நாட்டை அழித்தவர்கள் இன்று 19 ஆவது திருத்தத்திற்காகத் தோற்றுகிறார்கள்.


19 வது திருத்தம் என்ற போர்வையில் இந்த நாட்டை அழித் தவர்கள் அரசியலமைப்பிற்காகக் கண்ணீர் சிந்துகிறார் கள். இந்த நாட்டு மக்களை மீண்டும் அவர்களின் பொய்களால் ஏமாற்ற முடியாது.


20 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை நீட்டிக்கவில்லை.


இரண்டு தடவைக்கு மேல் கேட்க முடியாது எற்ற பிரிவு மாற்றப்படவில்லை. கோத்தாபய-மஹிந்த கூட்டணி தான் இந்த நாட்டை கட்டியெழுப்பிய நல்லிணக்கம்.


அவர்களிடம் அதிகாரங்கள் உயர் மட்டத்திலிருந்தாலும், அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஒரு போதும் பழுதாக்க மாவட்டம் என்பதை மக்கள் அறிவார் கள்.


நாம் அதை உறுதிப்படுத்துகின்றோம். எனவே, நல்லாட் சிக் குழுவின் பொய்களால் மக்கள் ஏமாற வேண்டாம் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

4 comments:

  1. என்னதான் மாற்றங்களை மாற்றி மாற்றிக் கொண்டு வந்திருந்த போதிலும், இறுதியில் இறை ஆட்சியே இலங்கைக்குப் பொருத்தமானதாக இருக்கும்.

    அது எக்காலத்துக்கும் எல்லோருக்கும் நீதி செலுத்தக்கூடியதாகவும் இருக்கும். 

    உலமா சபையினரையோ அல்லது அவர்கள் போன்றோரையோ ஆலோசிக்கும் தூரத்தில்தான் இவை அத்தனையும் உள்ளன.

    ReplyDelete
  2. இலங்கை அரசியலில் பெரும் சிறப்பியல்பு ஒன்று எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதாவது: - நான் செய்தது சரி. நான் திருப்பி சொன்னேன் தானே. அவர செய்தது பிழை. நான் சொன்னேன்தானே அவரதான் கேட்கவில்லை. ரணில் என்ன இவரா? மஹிந்தவுக்கு என்ன மூனு கொம்பா? எனக்கு யாரும் அரசியல் பாடம் கற்றுத்தர வேண்டிய தேவை இல்லை. எங்களுடைய ஆட்சிக்காலம் அவருடையதுபோல் அல்ல. மக்கள் மிகவும் சுகமாகத்தான் இருந்தார்கள். - இவரகளுடைய இலட்சணம் இப்போதுதான் விளங்குகின்றது. பொது மக்களினக் கேள்விக்கு இப்போது பதில் சொல்ல ஆயத்தமாகுங்கள். அது சரி என்ன கேட்கப் போகின்றார்கள். அதுதான் Top Secret. யாருக்கும் தெரியாது.

    ReplyDelete

  3. If 19A was so bad, why on earth did YOU and several other MPs from the then Opposition vote FOR 19A? Don't you know that 0f the 225 MPs excluding the Speaker, 212 MPs voted in favour, while 10 MPs absented, 1 MP abstained and ONLY 1 voted against the 19A?

    What a Shameless lot YOU and the others who Voted FOR the 19A then but who are now Vociferously Condemning the 19A? Disgusting. Simply a Disgusting lot You are.

    ReplyDelete

Powered by Blogger.