Header Ads



20 தொடர்பில் SLMC தீர்மானம் எடுக்கவில்லை - நல்லாட்சி மீதும் நசீர் அகமட் சாடல்


20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரையில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளமை தொடர்பில் நேற்று ஏறாவூரில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


20ஆவது திருத்தச் சட்டம் இன்னும் முழுமை பெறாத நிலையிலேயே உள்ளது. 20ஆவது திருத்தம் தொடர்பில் பொறுத்திருந்து இறுதி நேரத்தில் சரியான தீர்மானத்தினை எடுக்க வேண்டும்.


சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேச வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது.


நான்கரை வருடங்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஆதரவினை வழங்கிய போதிலும் அதன் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எந்தவிதமான தீர்வினையும் வழங்காமல் நல்லாட்சி ஏமாற்றியுள்ளது.


இருந்த மாகாணசபையினையும் இல்லாமல் செய்தது நல்லாட்சி அரசாங்கம் தான். சிறுபான்மை கட்சிகளும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. This guy trying his best to join the government. If he does, he should be kept as backbencher without any portfolios.

    ReplyDelete
  2. ஹாபீஸ் அவர்களே நீங்கள் எந்தக் கட்சி என்பதை முதலில் குறிப்பிடுங்கள்.

    ReplyDelete
  3. தீர்மானம் எடுப்பதையு்ம் ஊர் அரசியல் இனவாதத்தையும் விட்டுவிட்டு நாடளாவித ரீதியில் முஸ்லிம்களின் வாக்குகளை ஒன்றுதிரட்டி ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு சவாலாக அமையும் ஒரு முறை பற்றி புத்திஜீவிகள், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளுடன் இணைந்து இந்த இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக எவ்வாறு முஸ்லிம் சமூகத்தையும் தமிழ் சமூகத்தையும் எவ்வாறு ஒன்றிணைக்கலாம் என நீண்டகாலத்திட்டத்தில் இயங்கினால் பிரயோசனமாக இருக்கும். அதுதவிர எந்த விதமான பிரயோசனமற்ற அறிக்ைக விடுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

    ReplyDelete
  4. You seem to be confused, Mr. Naseer Ahmad. Your leader and the SLMC leader, Mr. Rauf Hakeem has Petitioned the Supreme Court against the 20A. Having done so, there is NO Question about the SLMC supporting the 20A.

    The SLMC or any others now Opposing the 20A can consider Supporting ONLY any Amended 20A. For those who are Opposed to the 20A as it is, there is NO question of any further consideration of supporting it EXCEPT in the case of MPs who are waiting for Ministerial Posts in the Government.

    ReplyDelete

Powered by Blogger.