Header Ads



போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 11 பில்லியன் ரூபாவை அரசுடமையாக்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை


போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவது தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சட்ட மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


நேற்று (14) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இந்த ஆசேனையை வழங்கியுள்ளார்.


கடத்தல்காரர்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஏனையவர்களுக்கு கைமாற்றுவதற்கும் விற்பனை செய்யவும் தடை விதிக்க தேவையான உரிய வேலைத்திட்டங்களை தயாரிக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியதாக, பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


இதற்கு தேவையான நீதிமன்ற கட்டளையை விரைவில் பெற்று இந்த செயற்பாடுகளை வினைத்திறனுடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.


கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு தேவையான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் எனின் அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.


இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் அரசுடைமையாக்கப்படவுள்ள சொத்துக்களில் 749 மில்லியன் ரூபா பெறுமதியான காணியும் அவர்களுக்கு சொந்தமான 89 வாகனங்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, சந்தேக நபர்களுக்கு சொந்தமான 11 பில்லியன் ரூபா நிதியும் காணப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1 comment:

  1. Wouldn't the Drug lords Get rid of their properties BEFORE the necessary Laws are enacted by the Govt.?

    ReplyDelete

Powered by Blogger.