Header Ads



கூகுளில் “செக்ஸ்” என்ற வார்த்தையை அதிகம் தேடிய முதல் 10 நாடுகளில் இலங்கை



2020ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகுளில் “செக்ஸ்” என்ற வார்த்தையை அதிகம் தேடிய முதல் பத்து நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதலாம் இடத்தில்எதியோப்பியா உள்ளது.


எத்தியோப்பியாவைத் தொடர்ந்து இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான், மியான்மர், சாம்பியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் இருப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.


கூகுளின் ஆண்டறிக்கையின்படி, 2019ம் ஆண்டில் இந்த வார்த்தையை தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தைப் பிடித்தது.


மேலும், 2012 தொடக்கம் 2016 ஆம் ஆண்டுவரை இந்தப் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


கூகுளின் ஆண்டறிக்கையின்படி, மேல் மாகாணத்தில் கொழும்பு, நுகேகொட மற்றும் ஹோமாகம ஆகியவை 2012ம் ஆண்டில் ‘செக்ஸ்’ என்ற வார்த்தையை அதிகம் தேடிய நகரங்களாகும்.


அதே நேரத்தில் 2020ம் ஆண்டில் வட மத்திய மாகாணம் முதலிடத்தில் உள்ளது.


வட மத்திய மாகாணத்தில் கட்டுவன்வில, கல்கடவெல, ராஜங்கனை, புல்முடே மற்றும் புனேவ ஆகிய நகரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊவா, வடக்கு, கிழக்கு, சபரகமுவ, மேற்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில், சியம்பலாண்டுவ, தேரவில், மஹாஓயா, பொரலுவாகே ஐனா, இஹலாபுலியங்குளம், வருகந்தெனிய மற்றும் ஹரஸ்பொத நகரங்கள் கூகுள் தேடுபொறியில் முறையே அதிக எண்ணிக்கையில் 'செக்ஸ்' என்ற வார்த்தையை தேடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. 'இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்;

    அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்;

    மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.'

    (அல்குர்ஆன் : 24:32)

    ReplyDelete

Powered by Blogger.