Header Ads



UNP யை கட்டியெழுப்பும் தகுதியும், அனுபவமும் என்னிடம் உள்ளது: கரு ஜயசூரிய


ஐக்கிய தேசியக் கட்சியை தன்னால் மீண்டும் கட்டியெழுப்ப கூடிய தகுதியும் அனுபவமும் தன்னிடம் இருப்பதாகவும் பூஜ்ஜிய நிலைமைக்கு சென்றுள்ள கட்சியை மீண்டும் தன்னால் கட்டியெழுப்பு முடியும் எனவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மலத்வத்து மாநாயக்க தேரரிடம் இன்று -31- தெரிவித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த நாளில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னேற்றத்திற்காக நடவடிக்கை எடுத்ததாகவும் நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று முற்பகல் மல்வத்து மஹா விகாரைக்கு சென்று மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகவும் பலவந்தமாகவோ, வேறு முறைகளிலோ கட்சியின் தலைமை பெற்றுக்கொள்ளும் எந்த தேவையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைமைத்துவத்தை வேறு ஒருவருக்கு வழங்க தயாராக இருப்பதாக அறிவித்த பின்னரே கட்சியை பொறுபேற்க தயாராக இருப்பதாக கூறினேன். கட்சியின் தலைமைக்கு சவால் விடுத்து, கட்சியை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கவில்லை.

பௌத்த சங்க சபையினரும், புத்திஜீவிகளும், கட்சியினரும், பிரதேச அரசியல்வாதிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை ஏற்குமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தனர். கட்சி தற்போது வீழ்ந்துள்ள நிலைமையில் இருந்து கட்டியெழுப்ப தேவையான திட்டங்கள் என்னிடம் உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள மேலும் சிலர் முன்வந்துள்ளனர். நான் கட்சியின் உறுப்பினர் அல்ல என சிலர் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. ஐ தே கட்சியை விட்டு மஹிந்த அரசில் சேர்ந்து அமச்சராகியதையும் சொல்லியிருக்கலாமே.ஐ தே கட்சியின் பின்னடைவிற்கு முதல் காரணம் நீங்களே.இப்போது யாராலும் அதை உயிர்ப்பிக்க முடியாது சஜித்தை தவிர.

    ReplyDelete
  2. You and 17 members cross the party and join with mahinda 2011.

    You not unp member at all

    ReplyDelete

Powered by Blogger.