Header Ads



UNP யில் இருந்து விலக தயாராகும் வேட்பாளர்கள், மாகாண தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்குகளையே பெறும் பரிதாபம்


நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 22 மாவட்டங்களில் போட்டியிட்ட 262 வேட்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள், கட்சியில் இருந்து விலக தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பார் என்ற தீர்மானத்தை அடிப்படையாக கொண்டே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி முழு நாட்டிலும் 2 லட்சத்து 49 ஆயிரத்து 439 வாக்குகளை பெற்று ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு வரலாற்றில் படுதோல்வியை சந்தித்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இந்த தோல்விக்கான நேரடி காரணம் ரணில் விக்ரமசிங்கவின் தலைமை மற்றும் அவரது தன்னிச்சையான தீர்மானங்கள் எனவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேர்தலை சந்தித்தால், தற்போது கிடைத்துள்ள இரண்டரை லட்சம் வாக்குகள், ஒன்றரை லட்சமாக குறைந்து மிக மோசமான நிலைமையை எதிர்நோக்க தாம் தயாரில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1 comment:

  1. செருப்பால அடி வாங்கியும் அறிவுவராத ஒரு முட்டாழ் இவன ரணில்.

    ReplyDelete

Powered by Blogger.