August 15, 2020

UNP யின் தேசியப் பட்டியல், ஜோன் அமரதுங்கவுக்கா..?


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது.


ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நள்ளிரவுக்கு முன்னர் தனது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரை அறிவிக்காததே இதற்கு காரணம்.


தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்த தேசிய பட்டியலில் ஜோன் அமரதுங்கவின் பெயரே முதலில் உள்ளது. இதனால், ஜோன் அமரதுங்கவின் பெயரை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது.


அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தமது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து அறிவித்துள்ளன.

0 கருத்துரைகள்:

Post a comment