August 28, 2020

புதிய Mp களுக்கான பயிற்சிப்பட்டறையில் அமெரிக்க உதவித்திட்ட பேனா, புத்தகங்கள் வழங்கியமைக்கு எதிர்ப்பு


புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அண்மையில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையின் போது முன்னெடுக்கப்பட்ட இரண்டு செயற்பாடுகளினால் உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று சபாநாயகருக்கு தெரிவித்தனர்.


பாராளுமன்றத்திற்கு முதன்முறையாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை கடந்த 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.


இந்த பயிற்சிப்பட்டறையின் போது அமெரிக்காவின் தலையீடு காணப்பட்டமையினால், உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கெவிந்து குமாரதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க,


பயிற்சிப்பட்டறையின் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தின் அதிகாரிகளால் எங்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு மற்றும் நிலையியற்கட்டளை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதன்போது, எமக்கு ஒரு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை அடங்கிய புத்தகமும் பேனையும் வழங்கியிருந்தனர். ACSA உடன்படிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் குறிப்பாக கடற்படையின் கருத்துக்களை கவனத்திற்கொள்ளாது 2017 ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் தலையிட்டதன் பின்னர், வௌிவிவகார அமைச்சின் செயலாளராக செயற்பட்டு ஓய்வு பெற்ற பின்னர், இந்த சபையின் முன்னாள் சபாநாயகரின் வெளிவிவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த செயற்பாடு பாராளுமன்றத்தின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கவில்லையா என பேராசிரியர் சன்னா ஜெயசுமனா அதே அமர்வில் கேள்வி எழுப்பியபோது, பாராளுமன்றத்தில் தகவல் தொடர்புத்துறையை மேம்படுத்த அமெரிக்க அரசு நிறைய பணம் செலவழித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. நம் நாட்டிற்கு எதிராக செயற்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் தலைவர் , பாராளுமன்றத்தின் தகவல் தொடர்பு பிரிவில் அதிகாரியாக உள்ளார் என்பதையும் பயிற்சிப்பட்டறையின் போது பார்த்தோம். இறுதியாக சபாநாயகராக செயற்பட்டவரினாலே இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. கெளரவ சபாநாயகர் அவர்களே, நம் நாட்டில் தேவையின்றித் தலையிடும் வௌிநாட்டின் ஒரு நிறுவனத்திற்கு பதவி வழங்கியுள்ளமையை நீங்கள் அறிவீர்களா? இந்த விடயம் தொடர்பில் பூரண கவனம் செலுத்துவீர்களா?


என கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பாராளுமன்றத்தின் சுயாதீனத்திற்கும் உறுப்பினர்களுக்கும் எவ்வித அழுத்தங்களும் வழங்க இடமளிக்க முடியாது என குறிப்பிட்டார்.

3 கருத்துரைகள்:

அமெரிக்காவின் அழுத்தம் இலங்கையில் பிரயோக்கப்படுவது பற்றி பாஉ. கெவிந்து அவர்கள் எழுப்பிய சிறப்புரிமை மீறல் பற்றிய விடயம் பற்றி வாசிக்கும் போது சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. இ்நத நாடு கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக படிப்படியாக அமெரிக்காவின் செல்வாக்குக்கு உற்பட்டு வந்துள்ளமை, இலங்கையின் அண்மைய வரலாற்றைப்பார்த்தால் மிகத் தௌிவாககத் தெரிகிறது. தற்போது உள்ள அரசாங்கம் பதவிக்கு வருவதற்கும் அமெரிக்கா பெரும் பங்கு வகித்தமையை பலர் அறிந்திருப்பார்கள். எம்ஸிஸி ஒப்பந்தம் கைச்சாத்திட ஆரம்பித்திலிருந்தே முன்னிலையில் இருந்தது இந்த அரசாங்கம் தான். அதன் பாரதூரம்பற்றியும் அது நாட்டுக்கு மிகப் பெரும் அச்சுருத்தல் என கற்றவர்கள் சுட்டிக்காட்டிய போதிலும் அதுபற்றி வாழாதிருக்கும் அரசும் இ்நத அரசாங்கம் தான். எனவே, இந்த அரசாங்கம் அமெரிக்காவுக்குப் பால்வார்க்கும் போது பாஉறுப்பினர்க்ள பூச்சாண்டு விளையாட்டுக் காட்டுவது யாருக்கு எனக் கேட்கத் தோன்றுகின்றது.

THIS IS A VERY VALUABLE, & IMPORTANT
QUESTION BY THE HON.MP

Supporting the "Enhancemntn of the communication platform in parliment", If the USA provide communication tools to do so, They will definetly SPY on our country matters. So seriously SRILANKA should not give such involvement to any foreign countries.

Post a Comment