Header Ads



எனக்கு இந்த பதவியை வழங்காது Mp ஆக மாத்திரம் வைத்திருந்தால் இதனை விட கௌரவமாக இருந்திருக்கும்



நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அரசியல்வாதியான எஸ்.பி.திஸாநாயக்க தனக்கு வழங்கப்பட்ட இந்த பதவி தொடர்பில் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.


புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கே மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவி வழங்கப்படும்.


எஸ்.பி.திஸாநாயக்க 1989 ஆம் ஆண்டு முதல் முறையாக நடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கங்களிலும் பல அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.


இந்த நிலையில் தனக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பதவி தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள எஸ்.பி.திஸாநாயக்கக, தனக்கு இந்த பதவியையும் வழங்காது நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் வைத்திருந்தால், இதனை விட கௌரவமாக இருந்திருக்கும் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. இந்த புகழ் பெற்ற கள்ளனுக்கு எந்தவித பதவியும் வழங்காமல் பாராளுமன்றத்துக்குப் பக்கத்தில் உள்ள பெரிய அசுத்த வாழியில் போட்டு மூடிவைத்தால் அது இ்நத நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த பெரிய சேவையாகக் கருதப்பட்டிருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.