Header Ads



கல்முனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இல்லாதெழிக்க ஜெமில் பகிரங்கமாக செயற்பட்டார் - ஹரீஸ் Mp


(சர்ஜுன் லாபீர்)

கல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவினை இல்லாமல் செய்ய நேரடியாகவும்,மறைமுகமாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமில் கடந்த தேர்தல் காலங்களில் செயற்பட்டார் குறிப்பாக என்னை தோல்வியடையச் செய்ய முழு முயற்சியாக ஈடுபட்டார் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.

இன்று(14) தனது வெற்றி குறித்தும்,மக்களுக்கு நன்றி தெரிவிப்பது சம்மந்தமாகவும், சமகால அரசியல் விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கல்முனை தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஒரேயொரு வேட்பாளராக என்னை மட்டும் நிறுத்தி கல்முனையின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைமை பகிரங்கமாக கல்முனையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெரிவித்து இருந்தும் கல்முனை தொகுதியில் என்னை தோல்வியடைய செய்ய வேண்டும் என்று முழு முயற்சியுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமில் ஈடுபட்டார். இந்த விடயத்தில் நான் மிகவும் கவலையடைந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம் எம் ஹரீஸ் தெரிவித்தார்.

தொகுதி வேட்பாளராகிய என்னுடைய இல்லக்கத்தை தவிர்ந்து ஏனைய சக வேட்பாளர்களுடைய இலக்கங்களை இட்டு பகிரங்கமாக அறிக்கையிட்டு வாக்கு கேட்டமையானது தனக்கு மிகவும் கவலைதருகின்ற விடயமாக இருந்தாலும் இது பற்றி கட்சியின் தலைமை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதனையும் தெரிவித்து கொள்ளுகின்றேன் என குறிப்பிட்டார்.

மேலும் சாய்ந்தமருது பிரதேசத்தில் எனது வெற்றிக்காக முழுமுயற்சியாக செயற்பட்ட முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராசாஹிவுக்கு விசேடமாக நன்றி தெரிவிக்கின்றேன்.அத்தோடு சாய்ந்தமருது பிரதேசத்தில் எனது வெற்றிக்காக உழைத்த கட்சியின் பிரதி பொருளாளர் ஏ.சி யஹியாக்கான் தவிசாளர் ஏ.எம் மஜிட், முன்னாள் மாநகர சபை உறுபினர் ஏ.நஸார்த்தீன் உட்பட ஏனையோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளுகின்றேன். என்பதோடு கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எனக்கும் எமது கட்சிக்கும் வாக்களித்த சகல மக்களுக்கும் நான் நன்றியினை காணிக்கையாக்கின்றேன் என குறிப்பிட்டு இருந்தார்.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப்,மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரோசம் அக்தார்,ஏ.சி.ஏ சத்தார்,எம்.எஸ்.எம் நிசார்(ஜேபி),எம்.நவாஸ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம்.ரணீஸ்,முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.நிசார்த்தீன் மாளிகைக்காடு கட்சியின் முக்கியஸ்தகர் எம்.எச் நாசர்,கல்முனை முன்னாள் மாநகர சபை வேட்பாளர் தேசமாணிய ஏ.பி.ஜெளபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.