Header Ads



கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் J. முளாபர் ஓய்வுபெற்றார்


அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் கடமையாற்றிய இலங்கை அதிபர் சேவை தரம்−௦1  ஐச் சேர்ந்த ஜனாப் J.முளாபர் தனது 60 வயது பூர்த்தியில் சேவையிலிருந்து 2020-07-31 ஆம் திகதி ஓய்வு பெற்றார்.


புது தென்னாவையை பிறப்பிடமாக கொண்ட அவர் தனது ஆரம்ப கல்வியை அ/பளளுவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து, தரம் 3 தொடக்கம் 11வரை

 அ/கல்லஞ்சியாகம அரபா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் தொடர்ந்தார்.1975 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தின் சித்தியைத் பெற்று 

02 ஆண்டுகள் ஜாமியா நளீமியாவில் கற்று  பின்பு அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் சேர்ந்து சிறப்புத் தேர்ச்சி அடைந்தனர்.1982/85 கல்வி ஆண்டுகளில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியாக வெளியேறி ஆரம்பக்கல்வி உதவி ஆசிரியராக 1985.03.10ல் நியமனம் பெற்று தனது கல்விச் சேவையில் தடம் பதிக்கிறார். 

அ/கல்லஞ்சியாகம அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், 

உப அதிபராகவும்  2010-02-23ஆம் திகதிவரை தொடர்ந்தும் சேவையாற்றினார்.இப் பாடசாலை மாணவர்களின் 

பெறுபேறுகளை அநுராதபுர மாவட்டத்தில் மிகவும் தரமானதாக அமைய அரும் பணியாற்றினார். 2006 இலங்கை அதிபர் சேவை தரம் −2 போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்ததை அடுத்து 2010-2013 வரை அ/கனேவல்பொல முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி பல சேவைகளை மேற்கொண்டார்.மேலும்  அ/தென்னாவ அந்நூர் ஆரம்பப் பாடசாலையின் உருவாக்கத்திலும் அயராது பாடுபட்டார்.

Dip.in.Edu , D.S.M போன்ற உயர்கற்கை நெறிகளை மேற்கொண்ட இவர் இலங்கை கடற்படை சேவை அதிகாரியாக கடமையாற்றியதும் குறிப்பித்தக்கது.


2013-2020 வரையான காலப்பகுதியில் அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் நீண்ட காலமாக கடமையாற்றிய முதலாவது அதிபர் இவராவார்.


இப்பாடசாலையில் சுற்றிமதிலமைப்பு,மைதான அபிவிருத்தி,கார்யாலய அமைப்பு,உட்கட்டமைப்பு அபிவிருத்தி,மலசல கூடங்கள் நிர்மானிப்பு,CCTV கமரா பொருத்துதல் மற்றும் மூன்று மாடி கட்டிட நிர்மாணம் போன்ற பல பெளதீக வள அபிவிருத்திகளில் தன்னை அர்பணித்த அவர் கல்விப் பெறுபேறுகளையும் உயர் மட்டத்தில் வைத்துக்கொள்ள  தொடர்ந்து ஈடுபட்டார். உயர்தர விஞ்ஞான/கணித வகுப்க்களையும் ஆரம்பித்து வைத்தியத்துறையில் மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளில் உயர்சித்தியினைப் பெற்று பல்வேறு துறைகளில் மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு வழிவகுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


அவரது சேவைகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக..!!!

No comments

Powered by Blogger.