Header Ads



கஞ்சா பயிர் செய்கையை, அனுமதிக்க வேண்டும் - பெங்கமுவே நாலக தேரர் கோரிக்கை


கஞ்சா பயிர் செய்கைக்கு இலங்கை மிகவும் பொருத்தமான நாடு என்பதால், அதனை அனுமதிப்பத்திரத்துடன் செய்ய தேவையான வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என ஆளும் கட்சியுடன் தொடர்புள்ள பிரபல பௌத்த பிக்கு பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

தேசிய மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி, சமூக சுகாதார ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி மருதானையில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் நேற்று கடமைகளை பொறுபேற்றுக்கொண்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாலக தேரர் இதனை கூறியுள்ளார்.

கஞ்சா என்பது மருந்து. அதனை பயிரிடுவது எமது நாட்டுக்கு மிகவும் சிறந்தது. எமது நாட்டில் விளையும் கஞ்சா மிகவும் உயர்ந்த தரம் கொண்டது.

10 முதல் 15 ஏக்கரில் சட்டவிரோதமாக பயிரிடும் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றி தீயிட்டு கொளுத்துகின்றனர். இது மிகப் பெரிய தவறு. எமது நாட்டில் இப்படியான முட்டாள் வேலைகளை செய்கின்றனர். அவற்றை அரசுடமையாக்கி ஆயுர்வேத திணைக்களத்திற்கு வழங்கினால் சிறந்தது. கஞ்சா பயிரிடுவதையும் பதிவு செய்து, அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தை உருவாக்கினால் பெறுமதியானது எனவும் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. காவி புடவையை அணியாமல் இந்த கருத்தை சொல்லியிருந்தால் இவனின் நிலைமை என்ன?

    ஹா...ஹா...ஹா... என்னால் சிரிக்கமுடியவில்லை

    ஏற்கனவே இவன் கஞ்சாபயிர் செய்துள்ளான் போலும் அதற்கு தற்போது அனுமதி கேட்கின்றான்

    இந்த காவிபிடவையும் இல்லாவிட்டால் இவன் யார்?

    ReplyDelete

Powered by Blogger.