August 28, 2020

சிங்களவரை குறைத்து மதிப்பிடவேண்டாம், குறைத்து மதிப்பிட்டால், அதற்கான மோசமான விளைவை எதிர்கொள்வீர்


சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விக்னேஸ்வரன் மனதில் கொள்ளவேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.


நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்க முயன்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் அந்த கதியேற்பட்டது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.


விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் விக்னேஸ்வரனுக்கு அதற்கான வயதுமில்லை காலமும் இல்லை என தெரிவித்துள்ளார்.


உங்களிடம் உள்ளது குறித்து மகிழ்ச்சி அடையுங்கள்,இந்த நாட்டில் சிங்களவர்களின் நிலையை குறைத்து மதிப்பிடவேண்டாம் அவ்வாறு குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள்,மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

7 கருத்துரைகள்:

துவேசம் துவேசியிடமிருந்து கக்கப்படுகின்றது. திரு விக்ேனஸ்வரன் எம்பி என்ன கூறுகின்றார் என்பதை விளங்குவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படாமல் வெறுமனே துவேசம் கக்கப்படுகின்றது. இதற்குத்தானா அல்லது ஒரு இனம் மற்ற இனத்தைப் பயங்காட்டுவதற்காகவா பாராளுமன்றம் என்ற போர்வையில் பொதுமக்களின் கோடான கோடிப் பணம் வீணடிக்கப்படுகின்றது.

இந்த நாட்டில் 70% மானோர் பௌத்தர்கள் வாழ்கின்றனர் என்பது உண்மை. அதனால் இலங்கைத் திருநாடு அவரகளுக்கு மட்டும சொந்தமான நாடு அல்ல. இவரகளுடன் கூடவே சுமார் 30% மான இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவரகள் போன்ற பல இன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எப்போது பார்த்தாலும் அரசியலில் பெறக்கூடிய சொற்ப இலாபத்திற்காக "மக்கள் தலைவர்கள்" எனக் கூறப்படுவோர் இனரீதியான வெறுப்புப் பேச்சுக்களை சிறுபிள்ளைகள்போல் பேசி வருகின்றமையினை தினந்தோரும் காணக்கூடியதாக இருக்கின்றது. இன்றைய எமது நாட்டிற்கு மிக அவசியமாகத் தேவைப்படுவது இன ஒற்றுமையும் பொருளாதார அபிவிருத்தியுமே. தற்போதைய அரசு 2/3 பங்கு பெரும்பான்மையினைக் கொண்டு விளங்குவதனால் இவ்விலக்கை அடைவது மிகவும் இலகுவானதாகும். பல்லின மக்கள் வாழும் இலங்கையில் அந்தந்த மக்கள் சுபீட்சமாக வாழ்வதற்கும் பொருளாதாரத்தை முன்னேற்றி வேலையில்லாப் பிரச்சினையை தீர்க்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கினறன. அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் அரசின் திட்டங்களுக்கு அமைய செயற்படுவதன்மூலமும்தான் எமது நாட்டை வளப்படுத்த முடியும் என்றே பெரும்பாலான புத்திஜீவிகள் கருதுகின்றனர். ஆனால் அரசியல்வாதிகளின் கைகளிலேயே நாட்டை மீண்டும் சுடுகாடாக ஆக்குவதா அல்லது வளர்ச்சியுறச் செயவதா என்பது தங்கியுளளது.

சரத் பொன்சேக்காவின் சிறுபான்மைச் சமூகங்களுடனான உறவு மிகவும் கசப்பானதே. கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இனவாத கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். அவர் போன்றவர்களை விடுத்து நிலமையாக செயற்பட்ட, சிறுபான்மைச் சமூகங்களையும் அனுசரித்தே செல்ல வேண்டும் என்ற சிந்தனையுடன் இருந்த பெரும்பான்மைச் சமூக அரசியல்வாதிகளின் சிந்தனை கூட தற்போது மாற்றம் அடைந்துள்ளது

பெரும்பான்மைச் சமூகத்திடம் போய் சிறுபான்மைச் சமூகங்கள் பற்றி மோசமாக இனவாதக் கருத்துக்களை உமிழ்வதன் மூலமே தான் அரசியல் ரீதியாக பலம் அடைய ்முடியும், தான் சார்ந்திருக்கும் கட்சி அரசியல் ரீதியாக பலம் அடைய முடியும் என்ற நிலைப்பாட்டிற்கே பெரும்பான்மைச் சமூக அரசியல்வாதிகள் தற்போது வந்துள்ளனர்.

தமிழர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கூட தான் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தமிழர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கூட தான் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இது சரத் பொன்செகா தன்னை போர்குற்வாளீ என்பதை நிரூபிக்கும் பேச்சா உள்ளது.

Post a comment