Header Ads



பொத்துவிலுக்கு கிடைத்த அரிய முத்து முஷர்ரப் முதுநபின்

முப்பத்து ஏழு (1983.06.10) வயதான  முஷர்ரப் பாரளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  பொத்துவிலின் இரண்டாவது மகனும் முதலாவது  முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

1977ஆம் ஆண்டு எம். கனகரத்தினம் முதலாவதாக  பொத்துவிலில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எஸ் பி மஜீத், அஸீஸ் ஆகிய இருவரும்  குறுகிய காலம் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக  பதவி வகித்து இருக்கிறார்கள்

முஷர்ரபுக்கு  இரு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளார் முஷாரப் குடும்பத்தில் இளையவர். தந்தை உயர்தரம் படிக்கும் போதே  மரணித்து விட்டார்

இவரின் சகோதரர்  குடும்ப பொறுப்பை ஏற்று நீண்ட காலமாக சவுதியில் தொழில் புரிந்து வருகிறார்

ஆரம்ப  கல்வியை பொத்துவில் இர்பான் வித்தியாலயத்திலும், மததிய கல்லூரியிலும் கற்றார் பின்னர் உயர் கல்வியை மருதமுனை அல்மனாரில்  பயின்றார் அதன் பின்னர் வசந்தம் தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றினார்

வசந்தம் .தொலைக்காட்சி   மூலம் நாடு பூராவும் பிரபலமானார் இவரின் நிகழ்ச்சி தொகுப்பும்  பேச்சாற்றலும் அனைவரையும் ஈர்த்தது தொழில் புரியும் போதே  சட்டக் கலை பயின்று சட்டத்தரணி ஆனார்

எந்த ஒரு அரசியல் பிற்புலமும்   இல்லாமல் இளவயதில் மிகக் குறுகிய காலத்தில் பாரிய பண செலவும் இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி  பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு இருப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது

இவரின் ஊடக பிரபலம் வெற்றிக்கு  குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை  செய்துள்ளது என்பதை மறுக்க முடியாது 

இவர்   ஊடகவியலாளர் , சட்டத்தரணி, அரசியல்வாதி என  பன்முக ஆளுமை கொண்டவர் 

முஷர்ரப் 47 ஆண்டுகளுக்கு பின்னர்  பொத்துவிலுக்கு கிடைத்த ஒரு முத்து என்று தான் சொல்லத் தோன்றுகிறது

பொத்துவில் மக்களுக்கு அரிய பல சேவைகள் செய்து என்றும் பொத்துவில் மக்களின் மனங்களில் வாழ்வார் என்பதுதான் எனது நம்பிக்கை

எம் வை இர்பான்

1 comment:

  1. நண்பர் முஷர்ரப் முஷர்ரப் முதுநபின் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.பொத்துவில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் உங்கள் ஆதரவை வளங்குவீர்கள் என்பதை அறிவேன். பொத்துவில் வளர நீங்கள் மேலும் மேலும் உயர்வீர்கள்.

    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
    (குறள் 647)
    - வ.ஐ,ச.ஜெயபாலன்

    ReplyDelete

Powered by Blogger.