Header Ads



மாலியின் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்: ஜனாதிபதி, பிரதமர் கைது!


மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டதையடுத்து அந்நாட்டு ஜனாதிபதி இப்ராகிம் பவுபக்கர் கெய்டா  ( Ibrahim Boubacar Keïta ) , பிரதமர் மெய்கா பவ்வ் சிஸ்சே   ( Soumeylou Boubèye Maïga ) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் அந் நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக அண்மைக் காலமாக மக்கள்  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இராணுவத்தில் பணியாற்றி வந்தவர்கள் திடீரென கிளர்ச்சியாளர்களாக மாறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது


அந்த வகையில் அந் நாட்டு ஜனாதிபதியான இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசின்  கட்டுப்பாட்டை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால், மாலியில் இராணுவம் ஆட்சியை பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 comments:

  1. ​தொடா்ந்து இவ்வாறு முசுலீம் நாடுகளில் மட்டுமே நடக்கிறது ஏன்?

    ReplyDelete
  2. (நபியே!) நீர் கூறுவீராக:

    “அல்லாஹ்வே!

    ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே!

    நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;

    இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்;

    நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்;

    நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;

    நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன

    அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”

    (அல்குர்ஆன் : 3:26)
    www.tamililquran.com

    ReplyDelete
  3. @ Pilla
    உங்கள் கேள்வி நியாயமானது. மனித குலத்திற்கான அதி சிறந்த போதனைகளை, அவனைப் படைத்த இறைவன் புனித அல் குர்ஆனில் போதித்திருக்கின்றான்.  அதனைக் கையில் வைத்துக கொண்டு அதன் ஆட்சியை நிறுவாமல் இருப்பதற்கான  தண்டனையே இது போன்றன.

    ReplyDelete

Powered by Blogger.