Header Ads



அங்கொட லொக்காவின் மரணத்தை, உறுதிப்படுத்திய கோயம்புத்தூர் பொலிஸ்

இலங்கையின் பிரபல பாதாளக்குழுவின் தலைவரான, அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்ததை, கோயம்புத்தூர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனரென, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கொட லொக்கா 2 வருடங்கள் இந்தியாவில்  பிரதீப் என்ற போலி பெயருடன் தலைமறைவாகியிருந்​தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவரின் மரணம், அங்கொட லொக்காவுக்கு போலி இந்திய அடையாள அட்டையை வழங்கியமை தொடர்பில், இலங்கைப் பெண்யொருவர் உள்ளிட்ட மூவர் இந்தியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 3ஆம் திகதி, அங்கொட லொக்கா கோயம்புத்தூர் வைத்திய கல்லூரி வைத்தியசாலையில், மாரடைப்பு காரணமாக பெண்ணொருவரால் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு அவர் உயிரிழந்ததையடுத்து, போலி ஆவணங்களைக் காட்டி, வைத்தியசாலையிலிருந்து அவரது சடலம் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு, மதுரையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அங்கொட லொக்கா உயிரிழந்ததை உறுதிப்படுத்துமாறு, இலங்கைப் பொலிஸார் தமிழ்நாட்டு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, அங்கொட லொக்காவின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கோயம்புத்தூர் பொலிஸ் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.