Header Ads



இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய தீர்மானம்


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளிநாட்டு தூதுரக அலுவலகங்களில் முன்னெடுத்து செல்லப்படும் நலன்புரி பிரிவுகளின் மேலதிக அதிகாரிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாக செலவினங்களை குறைத்து கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணியகத்தின் செலவினங்களை குறைத்து கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும் அந்த குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு தூதுரக அலுவலகங்களின் நலன்புரி பிரிவுகளில் 125 அதிகாரிகள் சேவையாற்றுகின்றனர்.

அந்த அதிகாரிகளின் 40 பேரை மாத்திரம் சேவைக்கு அமர்ந்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.