Header Ads



அதாவுல்லாஹ்வுக்கே தான் ஏன், அமைச்சராகவில்லை என்பது தெரியாது - ஹரீஸ்


(எம்.எம்.ஜபீர்)

புதிய பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு இன்று  பல சக்திகள் முஸ்லிம் சமூகத்தினை நசிக்க முற்படுகின்றன என திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.


மத்தியமுகாம் 12ஆம் கொளனி பிரதேசத்தில்  வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மக்கள் சந்திப்பு நேற்று நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.


முஸ்லிம் சமூகம் பாரிய சவாலுக்கு முகம்கொடுக்க போகின்றது வாக்குகளை பிரிக்காமல் எமது தாய் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்து கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளுகின்ற போது அதனை வைத்துக் கொண்டுதான் நாங்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க முடியும் என்ற செய்தியை கடந்த தேர்தலின் போது ஒவ்வொரு கூட்டத்திலும் கூறிவந்தேன்.


ஏன் முஸ்லிம் சமூகம் மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் இருக்கின்ற போது அதிகாரத்தின் உச்ச கட்டத்திலிருந்தது, ஏன் கடந்த ஆட்சியிலும் உச்சத்திலிருந்தோம். முஸ்லிம் சமூகம் எப்போது நீதி நியாமாக நடக்கின்ற ஒரு சமூகம் யாரையும் பழிவாங்குவதோ அல்லது அரசியல் ரீதியாக ஒரு விடத்தை தட்டிப்பறிக்கின்ற ஒரு சமூகம் அல்ல ஆனால் சில தரப்பினர் மிக நீண்ட நாட்களாக காத்திருந்தது போன்று நாங்கள் அதிகாரங்களை இழக்கின்ற  போது எங்களை ஏறிமிதித்து எங்களுடைய உரிமைகளை தட்டிபறிக்க வேண்டும் முஸ்லிம் சமூகத்தினை அடிமையாக்க வேண்டும் என்ற தோரனையில் செயற்படுவதற்கு தற்போது ஆரம்பித்துள்ளார்கள்.


மிகவும் பெரிய ஒரு ஆபத்தான சூழ் நிலை இதற்கு சகோதரர் அதாவுல்லாஹ் விதி விலக்கல்ல உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம் கடந்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினரானால் நான் கொபினட் அமைச்சர் என்று சகல தேர்தல் பிரச்சாரங்களின் போதும் சொல்லி வாக்கு கேட்டார். தற்போது அவரால் அமைச்சர் ஆகமுடியவில்லை இதற்கான காரணம் என்ன என்பது அவருக்கே தெரியாது ஏனென்றால் அமைச்சரவை பதவியேற்புக்கு வருமாறு அரச தரப்பு அழைப்பு விடுத்திருந்தது. 


அவர் கண்டிக்கு சென்று இருந்தார். ஆனால் அன்று அவருக்கு அமைச்சு பதவி கொடுக்கப்பட்டவில்லை ஏன் எதற்கு என்பது இன்று வரை புதிராகத்தான் இருக்கின்றது. இந்த விடயமெல்லாம் இந்த புதிய அரசாங்கத்தில் பல வடிவங்கள் இருகின்றது இதனை முஸ்லிம் சமூகம் புரிவதற்கு கால அவசகம் தேவைப்படும் எனவும் குறிப்பிட்டார்.

3 comments:

  1. எமது தாய் கட்சி என்றுசொல்லி மக்களின் வாக்குகளை சூறையாடி இவளவு காலமும் போலி அரசியல் செய்தது போதாதா? உங்களுக்கு மட்டும் வாக்களித்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? பாராளுமன்றம் சென்று ஓய்வெடுக்கவா

    நல்லது செய்வபவனையும் விடுவதில்லை, தானும் செய்வதில்லை இதுதான் உங்களை போன்றவர்களின் அரசியல்...

    ஹரீஸ் அவர்களே, நீங்கள் இந்த தேர்தலுக்கு நரித் தந்திரமாக உங்கள் சக வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றி ஈட்டியது போதாதா?

    பைசல் காசிம் இடம் ஒரு ஒப்பந்தம், மன்சூர் இடம் ஒரு ஒப்பந்தம், நசீர் இரதம் ஒரு ஒப்பந்தம் இறுதியில் இருவர் முட்டாள்களாக்க பட்டனர். சதிகாரன் ஹரீஸ்

    சொல்லும் செயலும் முழுக்க முழுக்க பொய் வாக்குறுதியும் ஏமாற்று அரசியலும் மட்டுமே... நயவஞ்சகன்.....

    நீ கட்சியின் ஒற்றுமையை பற்றி பேச வருகிறாய்...

    ReplyDelete
  2. ஆஹா...மிகப்பெரிய கண்டுபிடிப்பு. பிச்சைக்காரன் காலில் உள்ள புண் போன்று சமூகத்தை காட்டிக் காட்டி விற்று வயிறு வளர்க்கும் மு கா கட்சிக்கார்ர்களும் அ.இ.ம.கா கட்சிக்கார்ர்களும் ஏழைகளின் வயிற்றெரிச்சலுக்கும் சாபத்துக்கும் பயந்து கொள

    ReplyDelete
  3. சும்மா விடாது சாபம்.பதவிக்கும் பட்டத்துக்குமாக நீங்கள்போட்ட பல்டிகளும் டீல்களும் முஸ்லிம் சமூகத்திற்கே கேடாக அமைந்துவிட்டது.
    அட பாவிகளா அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.