Header Ads



இன்றுமுதல் மின்வெட்டு அமுல் - விபரம் இதோ...!


நாடளாவிய ரீதியில் இன்று -18- முதல் அமுலாகும் வகையில் ஒரு மணித்தியாலம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இன்று முதல் நான்கு கட்டங்களாக எதிர்வரும் 4 தினங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, 

மாலை 6 மணி முதல் 7 வரை முதலாம் கட்டமாகவும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை 2 ஆம் கட்டமாகவும் 8 மணிமுதல் 9 மணிவரை 3 ஆம் கட்டமாகவும் 9 மணி முதல் இரவு 10 மணிவரை 4 ஆவது கட்டமாகவும் பிராந்திய ரீதியில் குறித்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேசிய மின் கட்டமைப்புக்கு நுரைச்சோலை - லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை வழங்குவதற்கு 4 - 5 நாட்கள் செல்லும் என்று இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு கூறிய சுலக்ஷன ஜயவர்தன மேலும் குறிப்பிடுகையில்,

லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இவ்வாறான நிலைமை ஏற்பட்டது. 

இதனை நிவர்த்தி செய்யும் முயற்சியில் மின்சாரத்துறை பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இருந்த போதிலும் இதனை சீர்செய்வதற்கு 4 - 5 நாட்களேனும் செல்லும் என்று எதிர்பார்க்கின்றோம். எவ்வாறிருப்பினும் மீண்டும் இது போன்று தடங்கல் ஏற்படாமல் மின்சாரத்தை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவிக்கையில்,

மின்விநியோகத் தடங்கல் தொடர்பில் அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள குழுவினாலும் இலங்கை மின்சார சபையினாலும் ஆராயப்பட்டு வருகிறது. இவற்றின் நிறைவிலேயே சரியான காரணத்தைக் கூற முடியும் என்றார்.

No comments

Powered by Blogger.