Header Ads



ஒருநாடு ஒருசட்டம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சப்பட தேவையில்லை - தயாசிறி

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

ஒருநாடு ஒருசட்டம் என்ற வேலைத்திட்டம் தொடர்பில் தமிழ்,முஸ்லிம் மக்கள் அச்சப்பட தேவையில்லை. இது அடிப்படைவாதத்தை அடிப்படையாகக்கொண்டு கொண்டுவரப்பட்டதல்ல என பிரதி அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

ஒருநாடு ஒரு சட்டம் என்ற கொள்கை அடிப்படைவாதக்கொள்கையை அடிப்படையாக்கொண்டு கொண்டுவரப்பட்டதல்ல. நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போதும் எமது கட்சியைச்சேர்ந்த 11பேர் இந்த பிரேரணையை கொண்டுவந்திருந்தனர். இதுதொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு சந்தேகங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு அச்சப்படக்கூடிய எந்த விடயமும் இதில் இல்லை.

அத்துடன் ஒருநாடு ஒரு சட்டம் என்ற சட்டத்தின் கீழ் நாட்டில் இருக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கிலே இதனை நாங்கள் கொண்டுவந்தோம். இதுதொடர்பில் எதிர்கால திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவது எமது பாராளுமன்றத்துக்கு இருக்கும் கடப்பாடாகும். அதனால் இந்த சட்டம் இனவாதமாக மாறும் என யாரும் சிந்திக்கவேண்டாம்.

தமிழ்,முஸ்லிம் மக்கள் மற்றும் அந்த கட்சிகள் இந்த சட்டம் தொடர்பில் அச்சப்பட தேவையில்லை. அவ்வாறான எதுவும் இடம்பெறப்பாேவதில்லை. அத்துடன் ஜனாதிபதி அக்கிராசனத்தில் வைத்து தெரிவித்த விடயங்களை நடைமுறையில் கொண்டுவர நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.

No comments

Powered by Blogger.