Header Ads



ரத்தன தேரரும், ஞானசாரரும் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்பட செயற்படக் கூடாது - சிங்கள ராவய


(எம்.மனோசித்ரா)

எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்று அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் ஞானசார தேரர் ஆகியோர் கலந்தாலோசித்து தீர்வினைக் காண வேண்டும்.

அதனை விடுத்து நாட்டுக்கும் பௌத்த சாசனத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என்று கோருவதாக சிங்கள ராவய தேசிய அமைப்பின் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.

இதே வேளை இந்த சர்ச்சை தொடர்பில் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவிக்கையில் ,

ஓரிரு நபர்களுக்கு அல்லது ஒரு குழுவுக்கு தேவைகேற்றாற் போல பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து தீர்மானமெடுக்க முடியாது. 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள முதலாவது பாராளுமன்ற அமர்வில் எமது கட்சி சார்பில் உறுப்பினரொருவர் கலந்து கொள்ளாமலும் இருக்கலாம்.

எனது அனுமதி இன்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எங்கள் மக்கள் சக்தி கட்சியில் பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்ய முடியாது. நீதிமன்றத்தை நாடுவதன் மூலமாகவே இதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். இதே போன்ற பிரச்சினை இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்திலும் இடம்பெற்றுள்ளது. அதன் போது சட்ட ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்கு 2 வருட காலம் சென்றது. எனவே சட்ட ரீதியாக பிரச்சினைக்கு தீர்வு கண்ட பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என்றார். 

No comments

Powered by Blogger.