Header Ads



ரத்ன தேரருடன் எவ்வித முரண்பாடுமில்லை - ஞானசாரர்

(இராஜதுரை ஹஷான்)

பௌத்த மக்கள்  தனி  சிங்கள தலைவரை தெரிவு செய்ததை போன்று   சிங்கள அரசாங்கத்தையும் தெரிவு செய்துள்ளார்கள். பௌத்த மத உரிமைகள்  பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எமது போராட்டம் தொடரும் . 

அபே ஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசிய  பட்டியல் ஆசனம் தொடர்பில் அத்துரலிய ரத்ன தேரருக்கும், எனக்கும் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.  வேதனிய   விமல தர்ம தேரர் குறுகிய  காரணிகளை   கொண்டு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளார். என பொதுபல சேனா அமைப்பின்  பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

 பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று -10- இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக் கொண்டுகருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

  பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு  அபே ஜனபல வேகய கட்சி தாக்கல் செய்த வேட்புமனுக்கல்   நான்கு மாகாணங்களில் இரத்து  செய்யப்பட்டன.   17  தேர்தல்   மாவட்டங்களில்  போட்டியிட்டு சுமார்67ஆயிரம் வாக்குகளை  கைப்பற்றியுள்ளோம். இதற்கமைய  எமது கட்சிக்கு  தேசிய பட்டியல் ஊடாக  ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.  .   இந்த ஒரு  ஆசனத்தை  ஞானசார தேரருக்கு வழங்க வேண்டும் என   கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தது.

  ஞானசார தேரர்  தேசிய பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகுவதற்கு    சட்ட சிக்கல் காணப்படுகிறது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும்,   தேர்தலில் போட்டியிட முன்னர்  தேசிய பட்டியலில் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் மாத்திரமே தேசிய பட்டியல் ஊடாக  பாராளுமன்றம் செல்ல முடியும் என்ற  நிலைமை  காணப்படுகிறது.   .

  பௌத்த மத உரிமைகளை பாதுகாப்பதற்கு  சிறந்த  சூழல் தற்போது  தோற்றம் பெற்றுள்ளது.      பௌத்த பெரும்பான்மையின மக்கள் தனி   சிங்கள தலைவரை  தெரிவு செய்தை போன்று  தனி  சிங்கள அரசாங்கத்தையும் இம்முறை  தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே  இனிவரும்   காலங்களில்  பௌத்த மத உரிமைகளை பாதுகாக்க போராட வேண்டிய தேவை   எமக்கு கிடையாது.

அபேஜய  பல வேகய  கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசிய பட்டியல் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட கருத்துக்கள்  நிலவுகிறது.   பாராளுமன்றம் செல்வது தொடர்பில்   அத்துரலியே  ரத்ன தேரருக்கும், எனக்கும் இடையில்  எவ்வித முரண்பாடுகளும்  கிடையாது.    கட்சியின் பொதுச்செயலாளர்    தனது குறுகிய தேவைக்காக முறையற்ற விதத்தில் செயற்படுகிறார்.

 பொதுத்தேர்தலின் பெறுபேறுகள் வெளியான தினத்தில் இருந்து   அபேஜன    பல வேகய  கட்சியின் பொதுச்செயலாளர்   வேதனிய  விமலதேரர்  முறையற்ற  விதத்தில்  செயற்படுகிறார். கட்சிக்குள்  முரண்பாடுகள் காணப்படுகிறது.ஆகவே ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தேசிய   பட்டியல் ஆசனத்தை   தனக்கு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு  குறிப்பிட்டுள்ளார். அன்றைய  தினத்தில் இருந்து காணாமல் போயிருந்தார்.

  பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள 67ஆயிரம்  வாக்குகளை முறையற்ற விதத்தில் செயற்படுத்த  பிரான்ஷ் நாட்டில் இருந்து   திட்டமிட்ட வகையில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு  ஆதரவாகவே  பொதுத்செயலாளர் செயற்படுகிறார். தேசிய  பட்டியல் தொடர்பில் காணப்படும் சிக்கல் நிலைக்கு தீர்வை    பெற்றுக் கொள்ள  மூன்று  நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளார.

    இவருக்கு எதிராக  பௌத்த  சங்க சபையில் உள்ள  முறைப்பாடுகளையும், நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைமற்றும்   குற்றச்சாட்டுக்களில் இருந்து நீக்கல் மற்றும் பாதுகாப்பு  வழங்கல் ஆகிய  நிபந்தனைகளை   விதித்துள்ளார். இதனை  எவ்வாறு   செயற்படுத்துவது.  ஆகவே   முறையான பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு  பெற்றுக் கொள்ளப்படும்.   எமக்கு ஆதரவு  வழங்கிய  67ஆயிரம் மக்களுக்கு ஒருபோதும் அநீதி  விழைவிக்கப்படாது என்றார்.    

No comments

Powered by Blogger.