August 08, 2020

இலங்கை பிரதமருக்கு, இம்ரான் வாழ்த்து - தொலைபேசியில் தொடர்புகொண்டு பாக்கிஸ்தான் வரும்படி அழைப்பு

தேர்தல் வெற்றிக்காக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தொடர்புகொண்ட இம்ரான் கான் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிரான தனது நாட்டின் மூலோபாயம் குறித்து குறிப்பாக மக்களை பாதுகாப்பதற்காக வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்தும் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு உயிரூட்டுதல் குறித்தும் இம்ரான்கான் கருத்துப்பரிமாறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து எடுத்துரைத்துள்ள இலங்கை பிரதமர் அதன் காரணமாக சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்படாதது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து துறைகளிலும் பாக்கிஸ்தானின் ஒத்துழைப்பை பாக்கிஸ்தானின் பிரதமர் வழங்கியுள்ளார்.

கூடிய விரைவில் இலங்கை பிரதமரை பாக்கிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பாக்கிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a comment