Header Ads



கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் உடல் எரிப்பு - வீரவங்ச என்ன சொல்கிறார் தெரியுமா..?



கொரோனா தொற்றினூடாக இனவாத அரசியல் செய்ய சிலர் முயல்கின்றனர். இறந்தவர் புதைக்கப்படுகிறாரா? தகனம் செய்யப்படுகிறாரா? என்று பாராது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது குறித்து சிந்திக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார். 


இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், முஸ்லிம் ஒருவரின் சடலம் எரிக்கப்பட்டதால் 05 இலட்சம் பேர் வேதனையில் இருப்பதாக ஒரு எம்.பி சபையில் கூறினார்.பாரிய நாடுகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கையில் எமது நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டிருப்பது குறித்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். 

மூவின மாணவர்களும் பாடசாலை செல்கின்றனர். 


புதைப்பா? தகனமா? என்று பாராது மக்களுக்கு மத்தியில் கொரோனா பரவாமல் தடுத்தது குறித்து பார்க்க வேண்டும்.கிராமங்கள் மூடப்பட்டு சிங்கள,தமிழ் ,முஸ்லிம்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது குறித்து நோக்க வேண்டும்.தொற்றினூடாக இனவாத அரசியல் செய்ய முயல்கின்றனர். ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இனவாத அரசியல் தேவையில்லை.சிங்கள மக்களின் மட்டுமன்றி சகல மக்களினதும் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.


யாழில் சுதந்திரக் கட்சி சார்பில் ஒருவர் தெரிவானது மிக முக்கியமான விடயமாகும்.சீ.வி விக்கினேஷ்வரன் போன்றவர்களின் நோக்கத்தை உணர வேண்டும்.இனவாதம் பேசியவாறு அவர் சிங்கள அரசினூடாக தான் ஓய்வூதியம் பெறுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.


ஷம்ஸ் பாஹிம், நிசாந்தன் சுப்பிரமணியம்

2 comments:

  1. This is main fellow who behind all incidents for orders to burn muslims janasa.

    ReplyDelete
  2. HE is contradicting. If they had taken burning dead body as a mean to prevent virus spread, they should have delayed the general election as it could have worsen the spread to all country.

    Is is coming to say, the whole world and WHO are stupids in allowing the dead body to burial? He is finding all the ways to harm minority and snatch their rights. GOD will take his affairs. We raise our hand toward the ONE TRUE GOD to reply him suitable manner for taking our rights of burial.

    ReplyDelete

Powered by Blogger.