Header Ads



கோட்டாபய - மகிந்த புதிய அரசாங்கம், உலகில் உயர்வான இடத்தில் வைக்கப்படும்

கோட்டாபய - மகிந்த ஆகியோரின் ஒத்துழைப்புடன் கூடிய புதிய அரசாங்கம் உலகில் உயர்வான இடத்தில் வைக்கப்படும் எனவும் அடுத்த ஐந்தாண்டுகள் நாட்டின் அபிவிருத்தியின் பொற்காலமாக மாறும் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


மினுவங்கொடை கெஹெல்பத்தர பிரதேசத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


கடந்த 5 ஆம் திகதி பொதுத் தேர்தலில் நாட்டுக்கு எதிரான அனைத்து சக்திகளும் படுதோல்வியடைந்தன. இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி.கோட்டாபய - மகிந்த தலைமையிலான புதிய அரசாஙகத்தின் கீழ் நாட்டுக்கு எதிராக சூழ்ச்சிகளுக்கு எவ்வித இடமும் கிடையாது.


கம்பஹா மாவட்டத்தில் மேலதிகமாக 5 லட்சம் வாக்குகளையும் மாவட்டத்தில் 13 உறுப்பினர்களை தெரிவு செய்யுமாறும் நான் மக்களிடம் கோரிக்கை விடுத்தேன். மக்கள் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். நான் மாவட்டத்தின் தலைவர் என்பதால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் வெற்றி பெற நடவடிக்கை எடுத்தேன். இலக்கை அடைய முடிந்தமை மிகப் பெரிய மகிழச்சியை கொடுத்துள்ளது.


நான் 2015 ஆம் ஆண்டு மகிந்தவுக்காக வெளியேறி, மகிந்தவை எப்படியாவது மீண்டும் நாட்டின் தலைவராக பதவிக்கு கொண்டு வரப் போவதாக கூறினேன். பொதுமக்களின் வாக்குகளால் மகிந்த மீண்டும் நாட்டின் பிரதமராக பதவிக்கு வந்துள்ளார். மகிந்த ராஜபக்ச அண்மைய கால வரலாற்றில் நாட்டில் உருவான மக்களை அடிப்படையாக கொண்ட தலைவர். இதனால், நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.


இந்த தேர்தலில் நல்லாட்சியுடன் இருந்த பலர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு நடத்திய ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தற்போது அழிந்து போயுள்ளன.


மக்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். இந்த பொதுத் தேர்தலில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன பெற்ற வெற்றி உறுதியாகியுள்ளது எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.